பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 அன்பு கூறும்



திருஅருட்பா


திருவருட்பிரகாச வள்ளலார் என்னும் சிதம்பரம் இராமலிங்க சுவாமிகள் சென்ற இரு நூற்றாண்டின் முன் (1823 - 1874) தமிழும் சமயமும் புத்துயிர் பெற்று விளங்க செய்த சான்றோராவர். இவர் அருளிச் செய்த பாடல்கள், உரைநடைப் பகுதிகள், கீர்த்தனைகள் ஆகியவற்றையெல்லாம் ஆறு திருமுறைகளாகத் தொகுத்துத் திருவருட்பா என்ற பெயரால் வள்ளலாரின் மாணவரான தொழுவூர் வேலாயுத முதலியார் வெளியிட்டார்.

தாம் பெரிதும் போற்றிப் பின் பற்றி வந்த சமரச சன்மார்க்கத்திற்கு ஏற்ற இனிமையும் மென்மையும் வாய்ந்த மொழி தமிழ் மொழியே என்று வள்ளலார் கருதி அதன் சிறப்பை ஆறாந்திருமுறையில் விரிவாக விளக்குகிறார். மேலும், “எந்தை யுனைப்பாடி மகிழ்ந்த தின்புறவே வைத்தருளிச் செந்தமிழின் வளர்க்கின்றாய்” என்று இவர் கூறுவது தமிழ் நாட்டுச் சைவ, வைணவப் பெரியோர் தாம் தமிழில் பாடவேண்டுமென்பது இறைவனது திருவருட் குறிப்பு என்று கூறியுள்ளதை நினைவூட்டுகிறது.

இவரியற்றிய தமிழ்க் கீர்த்தனங்கள், கும்மி, கண்ணி போன்றவை இசைத் தமிழை வளமுறச் செய்தன, எளிய இனிய உரைநடைக்கு இவரியற்றிய சீவகாருணிய