பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

செந்தமிழ் பெட்டகம்


ஆறில் அருச்சுனன் தவம் புரிகின்றான். தவத்தைக் கலைப்பதற் காக இந்திரன் தேவமகளிரை ஏவுகின்றான். எட்டில் கந்தருவர்களும் தேவமாதரும் அருச்சுனனிருக்குமிடம் சேர்கின்றனர். எட்டில் பூப்பறித்தலும் நீர் விளையாட்டும் வருணிக்கப் பெறுகின்றன. ஒன்பதில் சாயங்காலம், சந்திர உதயம், மதுபானம், காலை, இவற்றின் வருணனை வருகின்றது. பத்தில் தேவமாதர் தவத்தைக் கலைக்க வீணே முயல்கின்றனர். பதினொன்றில் இந்திரன் முனிவேடத்தில் வந்து அருச்சுனனைப் பரீட்சித்து அவனுக்குச் சிவனை ஆராதிக்கும் முறையை உப தேசிக்கின்றான். பன்னிரண்டில் அருச்சுனன் தவம் வருணிக்கப் பெறுகிறது.

மூகன் என்ற அசுரன் பன்றியுருவில் அருச்சுனனைக் கொல்ல வருகின்றான். சிவன் அருச்சுனனைக் காக்க வேட வுருவந் தாங்கி வருகின்றார். பதின்மூன்றில் சிவனும் அருச்சுனனும் அப்பன்றியை ஒரே சமயத்தில் அம்பெய்து கொல்லுகின்றனர். பதினான்றில் சிவனால் அனுப்பப் பெற்ற வேடனுக்கும் அருச்சுனனுக்கும் சம் வாதம். பின்வரும் மூன்று சருக்கங்களில் கணங்களோடு கூடிய சிவனுக்கும் அருச்சுனனுக்கும் யுத்தம் நடக்கிறது.

பதினெட்டில் சிவன் அருச்சுனனுடன் மற்போர் புரிந்து மகிழ்ந்து வெளிப்பட்டுப் பாசுபதத்தைத் தருகின்றார். இந்திரன் முதலிய தேவர் தந்த வரங்களையும் பெற்றுக் கொண்டு, அருச்சுனன் திரும்புகின்றான். பொருட் செறிவுடைமை இக்காவியத்தின் தனிச் சிறப்பு. சிந்தனையைத் தூண்டும் பழமொழிகள் பல இதில் வருகின்றன. எளிதில் பொருள் விளங்காமையால் இக்காவியத்தின் இன்பத்தை நுகரச் சிரமம் தேவை என்பர்.

சிசுபால வதம் :

இது எட்டாம் நூற்றாண்டில் மாகன் என்ற கவியால் எழுதப் பெற்றது. இது கிருஷ்ணன்,சிசுபாலன் என்ற துஷ்ட அரசனைக் கொன்ற கதை. இதில் இருபது