பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

47


தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள் காலத்திலும், மகாராட்டிர மன்னர்களது காலத்திலும் அவ்வரசர்களது வரலாற்றை ஆதாரமாகக் கொண்ட பல வரலாற்றுக் காப்பியங்கள் எழுதப்பட்டன. ரகுநாதருடைய மனைவி ராமபத்திராம்பாளால் எழுதப்பெற்றது. ரகு நாதாப்யுதயம் என்னும் காப்பியம். அவ்வரசனது புகழ் பெற்ற அமைச்சர் கோவிந்த தீrவிதரால் (கி. பி. 1549-1614) எழுதப் பெற்ற வரலாற்று காப்பியம் சாகித்திய சுதா. அன்னாரின் புதல்வர் யக்ஞ நாராயணருடைய சாகித்யரத் னாகரம், ரகுநாதபூப விஜயம் என்னும் காவியங்கள், ராஜ சூடாமணி தீக்ஷிதரது ரகுநாத பூபவிஜயம் இவை யாவும் நாயக அரசனது வரலாற்றை ஆதாரமாகக் கொண்டவையே.

தஞ்சை மகாராட்டிர மன்னர்களில் முதலிடம் பெற்றிருந்த சாஹஜீ (கி பி 1687-1710) யினது வரலாற்றைக் குறிப்பவை: பூமிநாத கவியினது தர்மவிஜய சம்பூ, ஸ்ரீதர ஆய்யாவாளின் சாகேந்திரவிலாசம், பெரி அப்பா கவியினது சிருங்காரமஞ்சரிசாக ஜீயம்.

அதுல கவி எழுதிய மூவிக வமிச காப்பியம் கேரள நாட்டின் ஒரு பாகத்தைச் சேர்ந்த கோலத்து நாட்டு மன்னரது வரலாற்றைத் தழுவியது. இது கி. பி. 1ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது.

அரசர்களையல்லாமல் பெருமக்களையும் புலவரையும் பற்றிய சில வரலாற்று நூல்களும் உண்டு. காசியில் பிரசித்தி பெற்று விளங்கிய நாராயணப் பட்டர் என்னும் கவியினது வமிச வரலாற்றைக் கூறுகிறது சங்கர பட்டரது காதிவமிச வருணனை என்னும் காவியம். கி. பி. 18ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட விபாகரத்தின மாலா அல்லது விவேகபத்திர மாலா என்னும் நூல் விஜயநகர மன்னரால் போற்றப்பட்டு வந்த அருண கிரிநாதர் முதலிய கவிகளுடைய வமிச வரலாற்றைக் கூறுகிறது.