பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

63


என்பதைச் செயல்முறையில் நிறைவேற்றினார். மங்கல மொழி என்பதை இவர்தாம் ஆங்கிலத்தின் முதன் முதல் கையாண்டார். அறிவுக்கு விருந்தூட்டும் உரையாடல்கள் வரைவதில் இவர் தேர்ந்தவர். இவருடைய நடை பாடல்கள் போல ஒழுங்கும் வரையறையும் பெற்று விளங்கியது மைடாஸ், கலாத்தியா, சாபோவும் பாவோவும், எண்டிமியன் முதலியவை அவருடைய நாடகங்களில் புகழ் பெற்றவை. இவருடைய நாடகங்கள் பிற்கால நாடகத் தோற்றத்துக்கு உரத்தையும் தரத்தையும் ஊட்டின.

ஆங்கில இன்பியல் நாடகங்கள் பல வகைப்படும்.

1. பாவனை நவிற்சி இன்பியல்

2. மனப்பாங்கு இன்பியல்

3. நடக்கை இன்பியல்

4. மனப்பற்று இன்பியல்

5. கருத்துரை இன்பியல்

இவற்றுள் ஒவ்வொன்றும் தத்தம் அளவில் சிறப்பும் தனிமையும் பெற்றவை.

பாவனை நவிற்சி இன்பியல் :

புதுமை நாட்டம் மலர்ந்து பெருகிய நிலையில் மேலை நாட்டு இலக்கிய உலகில் கவர்ச்சியும் வேகமும் நிறைந்த ஒரு மாறுதல் ஏற்பட்டது.

ஷேக்ஸ்பியரின் பாவனை நவிற்சி இன்பியல் நாடகங்கள் அவற்றின் வளத்தாலும் வகையாலும் புகழ் பெற்றவை; உள்ளத்தைச் சிலிர்க்கச் செய்யும் ஆற்றல் நிறைந்தவை. ஷேக்ஸ்பியரின் இன்பியல் நாடகங்கள் பெரும்பாலனவற்றில் கற்பனை நுட்பங்களை நன்கு காணலாம். மனதுக்குக் களிப்பூட்டும் உவப்பான கதை, ஊடாடிவரும் பல்வேறு பாத்திரங்களின் செயற்செறிவு, ஏற்படும் துன்பம், துயரம், சிக்கல் யாவும் தேய்ந்து, இன்ப