பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70

செந்தமிழ் பெட்டகம்


குறைத்து, இறுதியில் அதை வேண்டாததாக ஆக்கி விட்டார்கள்.

பழைய கிரேக்கத் துன்பியல் நாடகங்கள் ஒரே இடத்தில் ஒரு நாள் அளவில் நடந்த நிகழ்ச்சிகளையே பொருளாகக் கொண்டிருந்தன. இந்தக் கட்டுப்பாட்டையும் மீறிப் பிற்காலத் துன்பியல் நாடகங்கள் வளர்ந்தன. ஆதி காலத்தில் திருவிழாக் காலங்களில் கூடும் மக்கள் உள்ளத்தில் நல்வழி புகட்டும் நோக்கத்தோடு புராணக் கதைகளை மட்டுமே சில சுவையான நிகழ்ச்சிகளைச் சேர்த்து நாடகங்களாக அமைத்தனர். பின்னர் நாளடைவில் காதல் முதலான கருத்துகளும் காட்சிகளும் நாடத்தில் சிறப்புப்புற்றுப் பொலியத் தொடங்கின.

தொடக்க நிலையில் குளிர்கால திருவிழாவில் இன்பியல் நாடகங்களும், வசந்த காலத் திருவிழாவில் துன்பியல் நாடகங்களும் நடித்தல் என்ற கட்டுப்பாடு இருந்தது. பின்னர், இன்பியலுக்கும் துன்பியலுக்கும் இத்தகைய கால வரையறையில்லாது போயிற்று. ஆகவே துன்பியல் நாடகத்தின் உட்பொருள், அமைப்பு ஆகியவை டையனசைஸ் திருவிழாத் தொடக்க நிலையிலிருந்து காலப் போக்கில் மாறிக் கொண்டே வந்தன.

பண்டைக் கிரேக்கத் துன்பியல் நாடகங்களை இயற்றியவர்களில் எஸ்கிலஸ், சாபக்ளீஸ் ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள். எஸ்கிலஸ் என்பவரின் நாடகத்தில் கோரஸின் முக்கியத்துவம் குறைந்தது. சாபக்கிளிஸ் எழுதிய ஈடிப்பஸ் ரெக்ஸ் என்ற துன்பியல் நாடகங்களில் மற்றொரு சிறப்பான குறிப்பு உண்டு. இவருக்கு முன் இருந்தவர்கள் தேவர்களையும் தேவதைகளையும் கொண்டு நாடகங்களை அமைத்தனர். ஆனால் மானிடர்களின் வாழ்க்கைச் சூழ்நிலையைச் சித்திரிப்பனவாக முதன் முதல் ஆக்கியவர் சாபக்ளீஸ்தான்.