பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் த. கோவேந்தன்

79


பொழுதுபோக்கு நடிகர்கள்' முயற்சி மிகவும் முக்கியமாயிருந்திருக்கிறது.

முழு ஐந்தங்க நாடகத்துடன் ஒரங்க நாடகத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் நாவலுக்கும் சிறுகதைக்கும் என்ன தொடர்போ, அதுவேதான் இங்கேயும் இருக்கிறது என்பது விளங்கும். ஆனால், இந்நாடகத்தை எழுதுவது மற்ற முழு ஐந்தங்க நாடகத்தை எழுதுவதை விட எளிது என்று நினைத்து விடக்கூடாது. அதைவிடக் கடினம் என்றுதான் ஒருவகையில் கூற வேண்டும். உதாரணமாக, ஓரங்க நாடகங்களிலும், எல்லாச் சுவைகளையும் பற்றியும் வரலாறு, புராணம், சமுதாயம் முதலிய எந்தப் பொருளைப் பற்றியும் எழுதலாம். ஒரு சம்பவத்தையே சித்திரிப்பதாயினும், பாத்திர வருணனை, கருத்தின் முக்கியத்துவம், சம்பவத் தொடர்ச்சி, உரையாடல், கதை, நாடகப் பண்பாகிய உணர்ச்சிப் போராட்டம் முதலியன எல்லாவற்றையும் வைத்து எழுதியாக வேண்டும். ஆயினும் நாடகத்துறையில் புது முறைகளை ஆராய்ச்சி செய்து காண ஆசைப்படுபவர்களுக்கு ஒரங்க நாடகங் கள் தாம் தகுதி. இங்கிலாந்தில் நாடகம் 19 ஆம் நூற்றாண்டில் மிகவும் நலிந்து, 20 ஆம் நூற்றாண்டில் மறுபடியும் தலை தூக்கி நிற்பதற்குக் காரணம்,ஒரங்க நாடகங்கள் தாம். இதற்கு முக்கிய காரணம் பொழுது போக்கு நடிகர்களுடைய முயற்சியேயாகும்.

இருபதாம் நூற்றாண்டில், முதலாவதாக அயர்லாந்தில் நாட்டில் டப்ளின் நகரத்தில் தான் 'நாடகப் பண்ணை அரங்கு’ என்பது 1904 ஆம் ஆண்டில், குமாரி ஏ.ஈ.எப், ஹார்னிமன் என்பவரால் ஏற்படுத்தப்பட்டது. அதன் பெயர் 'ஆபி தியேட்டர்'. இதில் நடித்த ஒரங்க நாடகங்களில் ஜே.எம்.சிஞ்ச் எழுதிக் 'கடல் வீரர்கள்' என்னும் நாடகம் மிகவும் சிறந்தது. இச்சிறு நாடகத்தில் மெளர்யா என்னும் கிழவி, தன் ஆறு வயது வந்த பிள்ளைகளையும் கடலுக்குப் பறி கொடுத்துவிட்டு, கடைசியில் தன்னுடைய ஆறாவது மகனும் இறந்த பொழுது பதட்டமின்றி,