பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

செந்தமிழ் பெட்டகம்


மிகச் சிறந்த இத்தாலிய நாடகாசிரியர்களுள் ஒருவர் ஆல்பியரி (1749 - 1803 ) பண்டை ஆசிரியர்களின் சுவடுகளைப் பின்பற்றினால்தான் நாடக அரங்கு துய்மை பெறும் என்று நம்பினார். இவருடைய நாடகம் ஒவ்வொன்றிலும் கொடுங்கோன்மையிடம் வெறுப்பும், சுதந் திரத்திடம் விருப்பும் மேலோங்கி நிற்கும். ஐந்து நாடகங் கள் சுதந்திரப்பேற்றை அடிநிலையாக உடையன.

19 ஆம் நூற்றாண்டில் சிறந்த நாடகாசிரியர் ஜியோவான வெர்கா (1840-1922) பல நாவல்களும் நாடகங்களும் எழுதியுள்ளார். இருபதாம் நூற்றாண்டில் பேர் பெற்றவர்கள் டா அனன்ஜியோ (1863-1938), பிராண்டெல்லோ (1867-1936). பிந்தியவர் 1934-ல் நோபெர் பரிசு பெற்றார்.

பிரான்ஸ்

நாடே சமய நாடகங்களை உயர்ந்த நிலை அடையச் செய்தது. கன்னி மரியாளைப் பற்றியும் கிறிஸ்தவ முனிவர்களைப் பற்றியுமுள்ள சமய நாடகங்கள் இப்போதும் ஏராளமாகக் கிடைக்கின்றன. கிறிஸ்தவ முனிவர் ஒருவரைப் பற்றிய நாடகம் ஒன்று 40 ஆயிரம் வரிகள் கொண்டதாயிருந்தது. இதுவே உலகில் மிக நீண்ட நாடகம் என்று கருதப்படுகிறது.

இந்த நாடகங்கள் 13 ஆம் நூற்றாண்டின் இறுதியிலேயே எழுத்து வடிவம் பெற்றன. இந்த நாடகங்கள் அங்கங்கள், காட்சிகளாகப் பிரிக்கப்படவில்லை. பெரும்பாலும் இசையே நாடகத்தைப் பல காட்சிகளாக இடையிடையே பிரிக்க உதவிற்று. சில நாடகங்கள் லத்தீனிலும், சில பிரெஞ்சு மொழியிலும் இயற்றப்பட்டன. இவை பொது மக்களுடைய பொழுதுபோக்குச் சாதனமாகப் பயன்பட்டன.

இவை முதலில் மாதா கோயிலுக்குள் நடந்தன; பாதிரிமார் நடித்தர். பின்னர் மற்றையோர் வெளியே