பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

செந்தமிழ் பெட்டகம்


தந்தை என்பவர் தொடங்கினார். விக்ட்டர் ஹியூகோ (1802-1885) என்பவர் இதைத் தழைத்தோங்கச் செய்தார். நாடகத்துக்கு நடிப்பே முக்கியம் என்றும், நடை இயற்கையாக இருக்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார். இவருடைய சிறந்த நாடகம் எர்னானி என்பது.

19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இந்த இயக்கம் நலிவுற்றது. சமூக நாடக வகை தோன்றியது. ஒழியே என்பவர் (1820-1889) என்பவர் சமூக நாடகம் காமச் சுவையில்லாமல் இருக்கலாம் என்பதை நிரூபித்தார். இவர் 20 ஆம் நூற்றாண்டின் நாடகத்துக்குத் தூண் போன்று இருந்தார். அந்த நூற்றாண்டு இன்பியல் நாடகங்களுக்கு முன் மாதிரியாகக் கருதப்படுவது அலெக்சாண்டர் டூமாஸ் (மகன்) என்பவரின் பாதி உலகம் என்பது. சார்டூ (1831-1908) என்பவர் போல் யாரும் எந்த நாட்டிலும் நடிக்கும் காட்சிக்கு முற்றிலும் இயையுமாறு நாடக சந்தர்ப்பங்களையும் மனித அனுபவங்களையும் இயற்றியதில்லை.

ஸ்பெயின்

இங்கிலாந்தில் போலவே ஸ்பெயின் நாட்டிலும் கிறிஸ்தவ மதச் சடங்குகளிலிருந்தே நாடகம் எழுந்தது. ஆயினும் மூர் சாதியாருடைய ஆட்சி ஒழிந்த பின்னரே ஸ்பெயின் நாட்டில் இலக்கியம் புத்துயிர் பெறவும், நாடகக்கலை வளரவும் இடமுண்டாயிற்று.

மற்றொரு பண்டைய நாடக முறை நடிக்காமல் பேச்சு மட்டும் நடைபெறுவதாகும்.இந்த நாடகம் பெரும்பாலும் பிரபுக்கள் வீட்டில் விருந்துகளுக்கிடையில் நடைபெற்று வந்தது.

லூக்காஸ் பெர்னாண்டெத் என்பவர் குடியானவருடைய காதலைப் பொருளாகக் கொண்டு நாடகங்கள் இயற்றினர். அவற்றின் பேச்சு இயற்கையை யொட்டியதாக இருந்தது. பலவித சந்தங்களைக் கையாண்டார்.