பக்கம்:செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்

3




II. பட்டியல்கள் உருவாக்கும் பணி

தமிழ்மொழி---இலக்கிய---நாட்டு வரலாறுகளை வரையப் பல சிறந்த தோற்றுவாய்களை (Sources) உருவாக்க வேண்டும். இன்றியமை யாதனவாகப் பின்வரும் சில விளக்கப்பட்டியல்களையேனும் (Descriptive catalogues) தமிழில் தொகுக்க வேண்டும்.

1. ஆதிநாள் தொட்டு இந்நாள் வரை வெளி வந்துள்ள தமிழ் நூல்கள்.


2. தமிழ் (Tamiliana) பற்றி ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் வெளி வந்துள்ள நூல்களும் கட்டுரைகளும்.


3. கடந்த பல தலைமுறைகளாகத் தமிழ் இதழ்களில் வெளி வந்துள்ள ஆராய்ச்சிக் கட்டுரைகள்---குறிப்புக்கள்.


4. தஞ்சைச் சரசுவதி மகால் போன்ற பழமையான பொது நூல் நிலையங்களில் உள்ள ஏடுகள், அச்சிட்ட நூல்கள்.


5. தமிழ் நாட்டில் தனிப்பட்டவர் நிருவாகத்தில் உள்ள நூல் நிலையங்களில் உள்ள ஏடுகள், அச்சிட்ட நூல்கள்.