பக்கம்:செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செந்தமிழ் வளா்க்கும் சித்தனைகள்

5


11. தமிழகத்திற்கு அப்பால் உள்ள பகுதிகளில்---சிறப்பாகத் தென்னகம், இலங்கை, கிழக்கு நாடுகளில்---தமிழோடு தொடர்புடையனவாய் இருக் கும் ஊர்ப் பெயர்களைத் தொகுக்க வேண்டும்.

('ஊரும் பேரும்' பற்றிய ஆராய்ச்சிக்கு இப்பட்டியல்கள் பயன்படும்.)


12. இதுவரை தமிழ் மொழியில் வெளிவந்துள்ள சிறந்த இதழ்களும் அவை பற்றிய விளக்கங்களும் கொண்ட ஒரு பட்டியல் தொகுக்க வேண்டும். இது 'தமிழ்நாட்டில் இதழ் வள ர் ச் சி' பற்றிய ஆராய்ச்சிக்குப் பெருந்துணை புரியும்.


13. தமிழ்நாட்டுப் பத்திரிகைகளில் இதுவரை வெளி வந்துள்ள தமிழ் இலக்கியம், வரலாறு முதலியன பற்றிய கட்டுரைகளைப் பற்றிய பட்டியல் தொகுக்க வேண்டும்.