பக்கம்:செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

செந்தமிழ் வளா்க்கும் சிந்தனைகள்


VIII. பழம்பொருள்---புதைபொருள்---ஆராய்ச்சி

1. கல்வெட்டு---புதைபொருள் துறை, ஒரு குக்கிராமத்தையும் விடாது ஆராய்ந்து ஆங்காங்குள்ள கல்வெட்டுக்களைப் பிரதிசெய்ய வேண்டும். வயலோரங்களிலும் வெட்ட வெளிகளிலும் வெயிலிலும் மழையிலும் அடிபட்டுக் கிடக்கும் பழம்பொருள்களை---கலைப்பொருள்களை---சிற்பச் செல்வங்களைச் சேகரித்துச் சென்னைப் பொருட்காட்சிச்சாலை அல்லது கலைப்பொருள் கூடத்தில் இடம் பெறச்செய்ய வேண்டும்.


2. தமிழ் நாட்டில் புதைபொருள் ஆராய்ச்சி போதுமான அளவிற்கு நடைபெறவில்லை. அக்குறை தீரப் பழம்பெருந்தலைநகா்கள்---துறைமுகப் பகுதிகள்---இருந்த இடங்களையேனும் கோண்டிக் காணும் முயற்சி உடனே தொடங்கப் பெற வேண்டும்.


3. தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சிக் குழு நாள் இதழ்களில் அறிக்கைவி ட் டு ப் பழங்கலைப் பொருள்கள் புதைந்திருக்கக் கூடிய இடங்களைப் பற்றித் தகவல் அளிப்பவர்கட்குப்பாராட்டும் பாிசும் வழங்க வேண்டும்.

4. தமிழ்நாட்டில் கண்டெடுக்கப் பெற்றுள்ள கல்வெட்டுக்கள், சாசனங்கள், நாணயங்