பக்கம்:செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்


 கிடைத்துள்ள புதிய விவரங்களோடு மாவட்ட அறிக்கைகள் (Gazetteers) தமிழில் உருவாக்கி வெளியிடப் பெற வேண்டும்.


2. பழைய ஆங்கிலக் கெசட்டீர்களில் உள்ள முக்கியப் பகுதிகள் மறுபதிப்பாக அச்சிடப் பெற வேண்டும்.


XII இலக்கிய இலக்கணப் பதிப்புக்கள்


1. தமிழ் இலக்கிய இலக்கணச் செல்வங்கள் அருஞ்சொற்குறிப்புக்களுடன் தக்க வகையில் பதிப்பிக்கப்பெற்று ஒரே வடிவான பதிப்புக்களாக (Uniform Editions) வெளியிடப்பெற வேண்டும்.


2. பல்வேறு உரைகளை உடைய இலக்கிய இலக்கண நூல்களின் எல்லா உரைகளையும் ஒரு சேரக் கொண்ட சிறந்த பதிப்புக்கள் வெளியிடப் பெற வேண்டும்.


3. பள்ளுப் பிரபந்தங்கள், குறவஞ்சி நுால்கள், அந்தாதிகள், கலம்பகங்கள், பிள்ளைத்தமிழ் நூல்கள் என்று வரிசைப்படுத்திப் பல்வேறு தமிழ் இலக்கியங்களையும் பதிப்பிக்க வேண்டும்.