பக்கம்:செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்

23




XXIV. தமிழ் மொழி-தமிழ் இலக்கியதமிழ் நாட்டு வரலாறுகள்


1. தமிழ் மொழி வரலாறு, தமிழ் இலக்கிய வரலாறு, தமிழ் நாட்டு வரலாறு - இவை மூன்றும் பல்வேறு கோணங்களிலிருந்து விரிவாக ஆராயப்பெறத் தனித்தனி நிபுணர் குழு நிறுவப்பெற வேண்டும். அக்குழுக்கள் தமிழ் மொழியின் -- தமிழ் இலக்கியத்தின் -- தமிழ் நாட்டின் ஒவ்வொரு நூற்றாண்டு வரலாற்றையும் மிக விரிவாக ஆராய்ந்து தொகுதி தொகுதியாக வெளியிட வேண்டும்.

XXV. ஆங்கிலத்தில் தமிழ்

1. ஆங்கில மொழியில் தமிழ் இலக்கிய வரலாறு பற்றிய நடுவுகிலையான கருத்துக்களைக் கொண்ட ஒரு வரலாற்று நூல் வெளி வர அறிஞர் குழு ஒன்று ஏற்பாடு செய்யவேண்டும்.

2. அக்குழுவே திட்டமிட்டுத் தமிழ் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் முயற்சியிலும் முனைய வேண்டும்.