பக்கம்:செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அணிந்துரை

பேராசிரியர் திரு. ந. சஞ்சீவி அவர்கள் தமிழுலகத்துக்குப் புதியவர் அல்லர். சஞ்சீவி அவர்கள், இலக்கியம்பற்றியும், வரலாறுபற்றியும் எழுதி யுள்ள நூல்களைத் தமிழுலகம் அறிந்திருக்கிறது. இப்போது, 'செந்தமிழ் வ ள ர் க் கு ம் சிந்தனைகள்' என்னும் பெயருள்ள இச்சிறு நூலைச் சிந்தனைக்கு விருந்தாக அளித்திருக்கிறார். இந்நுால், தமிழ் நாட்டின் இலக்கியம், வரலாறு, கலை, பண்பாடு முதலியவற்றையும் புதிய கலை களையும் ஆராய்ந்து செயலாற்றவேண்டிய ஆக்க வேலைகளைப்பற்றி யோசனை கூறுகிறது. தமிழ் மொழியை, தமிழர்களை அறிவுத் துறையில் வளர்ப்பதுபற்றி இந்நூல் கூறும் யோசனைகள் போற்றத்தக்கன; ஏற்கத்தக்கன ; செயலாற்றத்தக்கன. இந்த ஆக்க வேலைகளைப் பற்றி நுாற்றுக்கு மேற்பட்ட யோசனைகளை உடையது இந்நுால்.

பாரத தேசம் சுய ஆட்சி பெற்ற பிறகு, நாடெங்கும் உணர்ச்சியும் எழுச்சியும் காணப்படுகின்றன. பாரத தேசத்திலே பற்பல மொழிகளைப் பேசுவோர், தத்தம் தாய் மொழியைப் பல்துறைகளிலும் வளப்படுத்த முயன்று செயலாற்றி வருகிறார்கள். ஒரு மொழியை வளப்படுத்துவது அம்மொழி பேசுகிற மக்களை வளப்படுத்துவதாகும். மொழியில் வளர்ச்சி இல்லையேல் மக்களில் வளர்ச்சி இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. தமிழ் நாட்டிலும் மொழி வளர்ச்சிபற்றி ஒரளவு உ ன ர் ச் சி யு ம் எழுச்சியும் காணப்பட்டாலும், மற்ற மொழியாளருடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, நம்மவரின் ஊக்கமும் எழுச்சி