பக்கம்:செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

vii

 செல்கின்றனர். அதிலும் மேல் நாட்டினர் விஞ்ஞானத் துறையில் (ஆக்கத் துறையிலும் அழிவுத் துறையிலும்) செல்லும் வேகம் சொல்லும் தரத்தது அன்று. உலகத்தில் மற்ற மக்கள் இயங்கும் வேகத்தோடு தமிழ் நாடும் இயங்காமல் பின் தங்கி விடுமானால், தமிழா! உலக அரங்கத்தில் உன் நிலை என்ன என்பதைச் சிந்தித்துப் பார். மற்ற விஞ்ஞான வளர்ச்சிகள் இருக்கட்டும். எல்லா வளர்ச்சிக்கும் அடிப்படையான மொழி வளர்ச்சியுைக்கூட, இன்னம் செய்யத் தொடங்காமல் இருக்கிறாய். உடனே உன் ஆக்க வேலையைச் செயற்படுத்து. செயற்படுத்துவாயானால், மற்ற வளர்ச்சிகள் எல்லாம் தாமே வந்து அமைந்துவிடும்.

'செந்தமிழ் வளர்க்கும் சிந்தனைகள்’ என்னும் இந்நூல் படிப்பவரின் சிந்தனையைத் தூண்டிவிடும் என்பதில் ஐயமில்லை. தமிழ் வளர்ச்சிக்கு இன்றியமையாத அடிப்படையான கருத்துக்களை இந்நூல் கூறுகிறது. தகுந்த காலத்தில் இந்நூலை உதவிய திரு. சஞ்சீவி அவர்களுக்கு எமது நன்றி உரியது. இந்நூலைப் படிக்கும் ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு விருப்பமான துறையில் ஆராய்ந்து தமிழை வளா்ப்பாராக.

வாழ்க தமிழகம்!
வளர்க தமிழ் மொழி!

மயிலாப்பூர்,சென்னை,

25–8–59

சீனி.வேங்கடசாமி