பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியர் படிப்போர் மனமுருகும்படி வருணித்துள்ளார். பத்தாம் இயலில் வள்ளல் சீதக்காதியின் காலத்தை உறுதிப்படுத்தும் குறிப்புக்களைத் தந்துள்ளார். இவ்வியலில் தரப்பட்டுள்ள வள்ளலின் கொடிவழிப் பட்டியல் வரலாற்றாய்வாளர்க்கு மிகுதியும் பயன்படுவது. பதினோராம் இயலில் வள்ளலின் வழியினர் தாழ்நிலைக் குச் சென்ற நிலைகள் பற்றி ஆவணங்களின் துணைகொண்டு எடுத்துக்காட்டியுள்ளார். இறுதி இயல் நூலின் முத்தாய்ப்பாக அமைந்துள்ளது. வள்ளல் சீதக்காதிபற்றி உலவிவரும் கற்பனைச் செய்திகள் தக்க ஆதாரங்களுடன் மறுத்துரைக்கப்பட்டுள்ளன. 17ஆம் நூற்றாண்டில் தமிழகத் தே கடல் வாணிபத்திலும், நிருவாகத்திறமையிலும் சிறந்து விளங்கிய இசுலாமியச் சமயஞ்சார்ந்த அதேபோது தமிழையும் பாரசீகத்தையும் போற்றி வளர்த்த வள்ளல் சீதக்காதியின் வரலாற்றை ஆசிரியர் நடுநிலையோடு காய்தல் உவத்தலின்றி எழுதியுள்ளமை மிகவும் பாராட்டத்தக்கது. கிடைக்கும் போர்த்துக்கீசிய, டச்சு, ஆங்கில ஆவணங்களை ஆதாரங்களாகக் கொண்டு வரலாற்று நிகழ்வுகளை நிரல் பட விளக்கியுள்ளமை இங்குப்பெரிதும் குறிப்பிடத்தக்கது. அனைத்திற்கும் மேலாக வள்ளல் சீதக்காதி பெயரால் வழங்கும் பல கற்பனைச் செய்திகளைத் தக்க சான்றுகளோடு பொய்ப்பித்து உண்மையை நிலைநாட்டியிருக்கிற திறம் போற்றுதற்குரியது. அழகிய புகைப்படங்கள், கல்வெட்டுக்கள், பின்னிணைப்புக்கள் ஆகியவற்றைக் கொண்டு நூல் சிறப்புற அமைந்துள்ளது. கண்கள் பழுதடைந்த நிலையிலும்கூடக் கடமை தவறாமல் கடும் உழைப்பினை மேற்கொண்டு ஓர் வரலாற்று ஆசிரியனுக்கு இருக்கவேண்டிய பொறுப்புணர்ச்சியோடு எழுதப்பட்ட இந்நூலை மனமாரப்பாராட்டுகின்றேன். அன்பு நண்பர் டாக்டர் எஸ்.எம். கமால் அவர்கள் விரைவில் கண்ணலம் பெற்று மேலும் பல நல்ல நூல்களை எழுதியளிக்கவேண்டுமென மனமார வாழ்த்தி இவ்வுரையை நிறைவு செய்கின்றேன். பாண்டிச்சேரி c9or lor, 25.12.2000 )لإك соляў . ニー"フ