பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

હ્યું છે - செந்தமிழ் வள்ளல் சீதக்காதி செய்வதற்காக இராமநாதபுரம் கடற்கரைப் பகுதிக்குச் சென்ற) டச்சுக்காரரது லஸ்கர் ஒருவரை வேதாளை கிராமத்திலுள்ள மணியக்காரரும், முஸ்லிம்களும் துன்புறுத்தி விரட்டி அடித்தனர். தேவிப்பட்டினம் கிராமத்திற்கும் சென்ற லஸ்கருக்கும் இதே திலைஏற்பட்டது. இவைகளைப்பற்றியும், இவைகளுக்கெல்லாம் காரணமானவர் பெரியதம்பி மரைக்காயர் என்பதையும் ஒரு புகாரில் குறிப்பிட்டு அதனை டச்சுக்காரர்கள் சேதுபதி மன்னரிடர் நேரில் சமர்ப்பித்தனர். விசாரித்த மன்னர் சம்பந்தப்பட்ட திகழச்சிகளுக்கு பெரியதம்பி மரைக்காயர் பொறுப்பானவர் அல்ல என்பதை தீர்மானித்ததுடன் வேதாளை, தேவிப்பட்டினம் மணியக்காரர்களுக்கு மட்டும் அபராதம் விதித்து ஆணையிட்டார். டச்சுக்காரர்கள் எதிர்பார்த்தபடி பெரியதம்பி மரைக்காயரை குற்றவாளியாக சேதுபதி மன்னர் கொள்ளவில்லை. தொடர்ந்து பெரிய தக்பி மரைக்காயருக்கு சேதுபதி மன்னரிடம் மதிப்பும், மரியாதையும் குறையவில்லை. அடுத்து 1698 மார்ச் மாதத்தில் காயல்பட்டினத்திற்கு வடக்கே கடலில் முத்துக்குளிப்பதற்கு டச்சுக்காரர்கள் ஏற்பாடு செய்தனர். முத்துக்குளிக்க வருபவர்களிடம் தீர்வை வசூலிப்பதற்காக மதுரை மன்னர் சுங்கச்சாவடி ஒன்றை ஏற்படுத்தி இருந்தார். இந்த முத்துக்குளிப்பு பற்றி கடற்கரை ஊர்கள் பல வற்றுக்கு ச் டச்சுக்காரர்கள் அறிவிப் பு கொடுத்திருந்தும் போதுமான அளவில் முத்துக்குளிப்பதற்கு முத்து வணிகர்களும் முத்துக்குளிப்பவர்களும் முன்வரவில்லை. இதற்கு முக்கியமான காரணம் முத்துக்குளிப்பவர்களுக்கு சம்பந்தப்பட்ட முத்து வணிகர்கள் வழக்கம் போல் முன்பணம் கொடுக்க மறுத்து விட்டனர். இதற்கு பெரியதம்பி மரைக்காயர்தான் காரணம் என டச்சுக்காரர்கள் நம்பினர். மேலும் டச்சுக்காரர்கள் இந்த முத்துச்சிலாபத்தில் 1505 முத்துக் குளிப்பவர்களைக் கொண்ட 772 தோணிகள் மட்டுமே கலந்து கொள்ளு மச் с/ 42 செய்தனர். இதில் காயல்பட்டிணத்திலிருந்தோ, கிழக்கரையிலிருந்தோ, தோணிகள் اسـ o فا