பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Kè> செந்தமிழ்_வள்ளல்-தேக்கதி ད་སྐ r தனது இறுதிக்காலத்திலும் இறைவனிடம் இறைஞ்சி, இல்லை என்று சொல்லாத இதயம் வேண்டுமென கேட்டுக் கொண்ட இதிகாச விரன் கர்ணனுக்குப் பிறகு கலியுகத்தில் காலமெல்லார் கொடைகள் வழங்கி வாழந்த கோமகன் சீதக்காதி மரைக்காயர் மறைந்து விட்டார். தனது மறைவிற்குப் பிறகும் தன்னை நாடி வரும் புலவருக்கும், மற்றவருக்கும் பொன்னும் பொருளும் வழங்கி உதவ வேண்டும் என்ற பெரும் திட்டத்தை ஏற்படுத்திய ஒரே வள்ளல் "செத்தும் கொடுத்த " சீதக்காதி மறைந்து விட்டார். இவரது மறைவு கேட்டு மன்னரும், மக்களும் அடைந்த வருத்தத்தை வெளியிடக்கூடிய வார்த்தைகளே இல்லை என்று சொல்லலாம். கீழக்கரை மட்டுமல்லாமல் சேதுநாடு முழுவதுமே பகலவன் இல்லாத பகல் போல காட்சியளித்தது. போக்குவரத்துவசதியில்லாத அந்தக்காலத்தில் வள்ளலது மறைவுச் செய்தியை அறிந்த மக்கள் நாள்தோறும் கீழக் கரைக்கு வந்து தங்களது வேதனையையும் வருத்தத்தையும் வெளியிட்டு புலம்பி அழுது சென்றனர். தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த படிக்காசுத் தம்பிரான் ஒருநாள் கீழக்கரைக்கு வந்தார். ஏற்கனவே சீதக்காதி மரைக்காயரை சந்தித்து அளவளாவி அவரிடமிருந்து பொன்னும் பொருளும் பெற்றுச் சென்றவர். இப்பொழுது அவர் கேட்ட செய்தியை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இவ்வளவு சிறிய வயதில் வள்ளல் சீதக்காதி மரைக்காயர் மறைந்து விடுவார் என யார்தான் எதிர்பார்த்திருக்க முடியும் வள்ளல் மீது புலவர் கொண்டிருந்த பற்றும் மரியாதையும் பாடல்களாக அவரது வாயிலிருந்து வெளிவந்தன. தேவேந்திரனையொத்த அழகனாகிய வள்ளளது பேரும் புகழும் மண்ணிலுமட்டுமல்லாமல் விண்ணிலும் பரந்து விளங்குகின்றது. கமல மலர் போன்ற அழகிய வதனத்தையுடைய கண்ணுக்கினிய வள்ளல் மண்ணுக்குள்ளே புகுந்துவிட்டாரே! இது என்ன கொடுமை? الـ فا