பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ் வள்ளல் சீதக்காதி -N 陛 " தேட்டாளன் காயற் றுரைசீதக் காதி சிறந்தவச்ர நாட்டான் புகழ்க்கும் நாட்டிவைத் தான்றமிழ் நாவலரை ஒட்டாண்டி யாக்கி யவர்தம் வாயி லொருபிடிமண் போட்டான் அவனு மொளித்தான் சமாதிக் குழிபுகுந்தே" வேதனையின் வடிவாக வெளிப்பட்டுள்ள வார்த்தையின் முத்துக்காளாக இந்தப்பாடல்கள் அமைந்துள்ளன. வள்ளல் அவர்களிடம் சில பொழுது பழகிய ஒர் சைவத் துறவியின் உணர்வுகள் எப்படி இருக்கின்றன பார்த்தீர்களா இதுபோல வள்ளல் அவர்களிடம் பல காலம் பழகியவ்ர்கள், பாராட்டும் பரிசும் பெற்றவர்கள், வறுமை நீங்கப்பெற்று வள்ளலது உதவியினால் வாழ்க்கையில் உயர்ந்தவர்கள் இப்படியாக எத்துனையோ பேர்களது உணர்வுகளும் வேதனைகளும் எப்படி இருந்திருக்கும். சாதி சமயம் கடந்து தமிழால் பிணைக்கப்பட்ட இந்த அன்புள்ளங்களின் வேதனை எப்படி திரும்? கடைச்சங்க காலத்திற்குப்பிறகு தமிழகத்தில் தோன்றிய தனிப்பெரும் வள்ளல் சீதக்காதி மரைக்காயர் ஒருவரே. வாராது வந்த இந்த வள்ளலை தமிழ் உலகம் என்றென்றைக்கும் நன்றிக் கடப்பாட்டுடன் நெஞ்சில் வைத்து நினைவு கூறும் என்பதில் ஐயமில்லை. தமிழ் நிலைத்திருக்கும் வரை வள்ளலது கொடையும் பெயரும் நிலைத்திருக்கும்.