பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ৰog> - செந்தமிழ்_வள்ளல்-சீதக்கதி கீழக்கரையிலுள்ள ஒரு குறிப்பட்ட வணிகக் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உரிய பட்டப்பெயர் என்றும் அந்தக் குடும்பத்திலுள்ள அனைவரையும் அந்தப்பெயர் குறிப்பிடுவதாக உள்ளது என்றும் வரைந்துள்ளார். மேலும் அவர் டச்சுக்காரர்களது ஆவணங்களின் படி கிழக்கரையில் பெரியதம்பி என்ற பெயருடன் மூவர் இருந்தனர் என்றும் அவர்களில் முதல்வர் கி.பி. 1682 முதல் கி.பி. 1698 வரை வாழந்த சேக் அப்துல் காதர் என்பவரையும் , இராண்டாமவர் கி.பி.1698 முதல் கி.பி.7707 வரை வாழந்த அப்துல் காதர் என்றும் மூன்றாமவர் கி.பி.1775 வரை வாழ்ந்த அப்துல் காதர் மகன் என்றும் குறிப்பிட்டுள்ளார் . (இவரது பெயரையும் குறிப்பிடவில்லை) இதிலிருந்து பெரியதம்பி எனக் குறிப்பிடப்பட்டுள்ள சீதக்காதி மரைக்காயர் யார் என்பதை அறிய முடியாதபடி ஒரு குழப்பத்தை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த மூவரில் மூத்தவர் பெயர் வுேக் (செய்யது) அப்துல் காதர் என்று குறிப்பிடுவதிலிருந்து பெரியதம்பி என்ற பட்டப்பெயருடன் வழங்கப்பட்ட செய்யது அப்துல் காதர் மரைக்காயர்தான் (சீதக்காதி) என்பதை டச்சு ஆவணங்கள் உணர்த்த தவறிவிட்டன. பெரிய தம்பி மரைக்காயர் என்ற பட்டர் சீதக்காதியின் தகப்பனாருக்கு இருந்ததை வேதாளை கல்வெட்டு தெரிவிக்கின்றது. இதே பட்டம் சீதக்காதி மரைக்காயருக்கும் இருந்தது என்பதை சீதக்காதி மரைக்காயரின் திருமணப்பாடலில் - "தேடும புகழ்க்கவிதைச் செந்தமிழோர்க் கீந்துதவும் நாடும் விசையரகு நாதப் பெரியதம்பி " என்று குறிப்பிடப்பட்டிருப்பதிலிருந்து அறிந்து கொள்ளலாம். ஆதலால் பெரியதம்பி என்ற பட்டம் சீதக்காதி மரைக்காயரது தந்தையாருக்கும், சீதக்காதி மரைக்காயருக்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்டது என்பது தெளிவு. டச்சு ஆவணத்தில் கண்டபடி இந்தப்பட்டம் சீதக்காதி மரைக்காயர் குடும்பத்தில் வேறு யாருக்கும் வழங்கப்படவில்லை என்பதைக் குறிக்கும் ஆவணங்கள் எதுவும் இல்லை, டச்சு ஆவணங்களில் குறிப்பிடப்படுகின்ற ـفا །སྐ