பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்.எம்.கமால் <oউ> இரண்டாவது பெரியதம்பியான அப்துல் காதரும், அவரது மகனாகக் குறிப்பிடப்படுகின்ற மூன்றாவது பெரிய தம்பியும் யார் என்பதை இனங்கண்டுகொள்ள இயலவில்லை. ஏனெனில் இந்தப் பெயர்கள் வள்ளல் சீதக்காதியின் முன்னோர்களையும், பின்னவர்களையும் விளக்கமாகக் காட்டுகின்ற கிழக்கரை நடுத்தெரு வம்சாவழிப்பட்டியலில் இந்த இரண்டாவது, மூன்றாவது பெரியதம்பியைப் பற்றி விபரங்கள் காணப்படவில்லை. ஆனால் சீதக்காதி மரைக்காயரது முகவராக (AGENT) பணியாற்றிய மாமு நெய்னார் பற்றிய விபரச் சீதக்காதி நொண்டி நாடகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. Go G 6u கண்ட αναδα9/7 வழிப்பட்டியலிலிருந்து மாமு நெய்னார் என்பவர் வள்ளல் சீதக்காதியின் தந்தையான பெரியதம்பி மரைக்காயரது உடன்பிறந்த சகோதரரான மீராப் பிள்ளை மரைக்காயரது மகன் என்பதும் அந்த வம்சாவழிப்பட்டியலிலிருந்து தெரியவருகிறது. சீதக்காதி மரைக்காயரது பிறந்த நாள் வருடர் பற்றிய விபரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் இவர் இராமநாதபுரத்தில் ஆட்சி செய்த கிழவன் என்ற ரெகுனாத சேதுபதியின் காலத்தவர் என்பதற்கான சான்றுகள் பல உள்ளன. விஜய ரெகுனாதப் பெரியதம்பி என்ற பட்டம் கிழவன் ரெகுனாத சேதுபதி மன்னரால் சீதக்காதி மரைக்காயருக்கு வழங்கப்பட்டு கெளரவிக்கப்பட்டதாகும். இதிலிருந்து சீதக்காதி மரைக்காயர் கிழவன் ரெகுனாத சேதுபதியின் சமகாலத்தவர் என்பது தெரிய வருகிறது. சேதுபதி மன்னருக்கும். சீதக்காதி மரைக்காயருக்கும் மிகவும் நெருக்கமான தொடர்புகள் இருந்து வந்ததையும் சேது நாட்டு அரசியலில் முக்கியமான முடிவுகளை சீதக்காதி மரைக்காயரது ஆலோசனையின் பேரில் தான் மேற்கொண்டார் என்பது மச் சேது நாட்டுக் கடற்கரைப் பகுதியில் குடியிருந்தவர்களிடமிருந்து வரி வசூலிக்கும் அதிகாரத்தை சீதக்காதி மரைக்காயருக்கு வழங்கி இருந்தார் என்பன போன்ற பல செய்திகளுக்கு டச்சு ஆவணங்கள் சான்றாக அமைந்துள்ளன. r