பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<@> செந்தமிழ் வள்ளல் சீதக்காதி ויר r வந்ததன் காரணமாக மேலே கண்ட வினாக்களுக்கு ஒரளவு விளக்கம் அளிக்கலாம் என எண்ணுகிறேன். வள்ளல் சீதக்காதி மரைக்காயரது மறைவிற்குப்பிறகு அவரது உள்நாட்டு வெளிநாட்டு வாணிபத்தை மேற்கொண்டு நடத்தியவர் யார் என்பது புரியவில்லை. டச்சுக்காரரது ஆவணங்கள் அவரை இரண்டாவது பெரிய தக்பியாகிய அப்துல் காதர் எனக் குறிப்பிடுகின்றன. அவருக்கும் மறைந்த சீதக்காதி மரைக்காயருக்கும் என்ன உறவு என்பது புரியவில்லை. என்றாலும் அந்த நபர் சீதக்காதி மரைக்காயரைப் போன்று வாணிபத்தில் சிறப்பான அனுபவமும் துண்ணறிவும் உடையவராகத் தெரியவில்லை. இதன் காரணமாக டச்சுக்காரர்களது வியாபாரப்போட்டியை அவரால் சமாளிக்க இயலவில்லை. தொடக்கத்தில் டச்சுக்காரர்களது வாணிபத்தில் அவர் ஒத்துழைப்பு நல்கி வந்தார். மதுரை, இராமநாதபுரம் சீமைகளில் கைத்தறித்துணிகளுடன் மான் தோல்களை சேகரிப்பதிலும் டச்சுக்காரர்களுக்கு அவர் உதவி வந்தார். கி.பி.770 முதல் 7706 ஆண்டுகளில் சுமார் 1,20,000 comলী தோல்களை டச்சுக்காரர்கள் கொள்முதல் செய்ததிலிருந்து இந்த உண்மை புலப்படுகிறது. என்றாலும் அவர்கள் தொடர்ந்து அந்த 'நபரை சந்தேகக்கண் கொண்டு பார்த்து வந்ததுடன் அழிக்கப்பட வேண்டிய எதிரியாகவே கருதி வந்தனர். இதனால் அந்த நபரைப்பற்றிய பொய்யான புகார்களையும் சேதுபதி மன்னரிடம் தெரிவித்து வந்தனர். சீதக்காதி மரைக்காயர் காலம் முதல் கிழக்கரை முஸ்லிமர் வணிகர்களிடம் குறிப்பாக சீதக்காதி மரைக்காயரது குடும்பத்தினர் மீது மன்னருக்கு பரிவும் பற்றும் இருந்து வந்ததால் டச்சுக்காரர்களது முறையிடுகள் எதனையும் அவர் காதில் போட்டுக் கொள்ளவில்லை. எப்படியாவது சீதக்காதி மரைக்காயரது குடும்பத்தினர்களை சேது நாட்டு அரசியலிலிருந்து அப் புறப்படுத்திவிட்டால் தார் விரும்பிய சலுகைகளை மன்னரிடமிருந்து பெற்றுவிடலாம் என்ற திட்டத்தில் டச்சுக்காரர்கள் செயல்படுவதை மன்னர் நன்கு அறிந்திருந்தார். ابر فا