பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<(B> - செந்தமிழ் வள்ளல் சீதக்காதி حا י இலக்கியக்கட்டுரைக் கோவை " (பக்கம் 17 முதல் 44 வரை) என்ற நூலிலும், கி.பி.1993-ல் ஜனாப் K.S.அப்துல் லத்திப் M.A. அவர்கள் வெளியிட்ட "காயல்பட்டினம் ' என்ற நூலிலும் வள்ளல் சீதக்காதி அவர்கள் காயல்பட்டினத்தில் பிறந்தவர் என்பதை உறுதியாக வரைந்துள்ளனர். ஆனால் அவர்கள் கூற்றுக்கு ஆதாரமாக எந்தவித சான்றுகளையும் குறிப்பிடவில்லை. இன்னும் சில கட்டுரையாளர்கள் வள்ளல் சீதக்காதி அவர்களும், அவரது உறவினர்களும் இமாம் சதக்கத்துல்லாஹற். அப்பா போன்று கி.பி. பதினேழாம் நூற்றாண்டின் பிற பகுதியில் காயல்பட்டினத்திலிருந்து இடம்பெயர்ந்து கீழக்கரைக்கு குடியேறியவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இன்னொரு பிரிவினர் வள்ளல் சீதக்காதி அவர்கள் காயல்பட்டினத்தைச் சார்ந்தவர் என்பதற்கு ஆதாரமாக படிக்காசுத் தம்பிரான் அவர்களது வள்ளலைப்பற்றிய பாடலில், தென்காயல் பதியானே, தினம் கொடுக்கும் கொடையானே. என்ற தொடரில் உள்ள தென்காயல் என்ற சொல்லை அவர்களுக்கு ஆதரவாக எடுத்துக் கொள்கின்றனர். மேலே கண்டவைகளிலிருந்து வள்ளல் சீதக்காதி அவர்கள் காயல்பட்டினத்தில் பிறந்தவர் அல்லது அந்த ஊரைச் சார்ந்தவர் என்பதற்கான தெளிவான செய்தி எதையும் யாரும் புரிந்து கொள்ளமுடியாது. ஆனால் ந மக்கு கிடைத்துள்ள ஆவணங்களிலிருந்து வள்ளல் அவர்களும், அவர்களது மூதாதையர்களும் கிழக்கரையைச் சார்ந்தவர்கள் என்பதை எளிதில் கூற முடியும். கிழக்கரைக்கும் காயல்பட்டினத்திற்கும் ஏற்பட்ட தொடர்பு கி.பி. பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்பட்டது மட்டுமல்ல துரத்துக்கு டியிலும், காயல் பட்டினத்திலும் முஸ்லிம்களுக்கும், பரவர்களுக்கும் இடையே எழுந்த பகை உணர்வு, பூசல், மோதல் ஆகியவைகளின் காரணமாக கடல் வாணிபத்தில் ஈடுபட்டிருந்த அந்த பகுதியைச் சேர்ந்த முஸ்லிமச் ابر