பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<@: செந்தமிழ் வள்ளல் சீதக்காதி r வந்த பிறகு வள்ளல் அவர்கள் ஏற்கெனவே காலமாகிவிட்டாசி என்ற செய்தி அந்த புலவருக்கு Gωνgoooo76ω αναγω, விரக்தியையும் ஏற்படுத்தியிருக்கும் என்பது உறுதி. இதனை அறிந்த வள்ளல் அவர்களது மாளிகையில் உள்ளவர்கள் புலவருக்கு தேறுதல் சொல்லி வள்ளல் அவர்களது நினைவாக பொன்னும் பொருளும் கொடுத்து அவரை அனுப்பி வைத்திருந்தல் வேண்டும்.இந்த உண்மையைத்தான் செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்ற வழக்குக்கு ஆதாரமாகக் கொள்ளலாம். ஆனால் நமது தமிழகத்து நூலாசிரியர்கள் மேலே சொல்லப்பட்ட புலவர் கிழக்கரையில் அமைந்த வள்ளலது சமாதிக்குச் சென்று தமது கையறு நிலையை கூறி வருத்தப்பட்டதாகவும் அப்பொழுது சமாதியிலிருந்து வள்ளல் அவர்களது வைர மோதிரம் அணிந்த கை விரல் ஆறுதல் அளிக்கும் வண்ணம் வெளியே வந்து புலவருக்கு காட்சி தந்ததாகவும், அந்த மோதிரத்தை தமக்கு வள்ளல் அவர்கள் வழங்கியதாக புலவர் எடுத்துச் சென்றதாக கற்பனையுடன் புனைந்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். இந்தக் கற்பனைக் கதைதான் தமிழக மக்களிடம் இன்று வரை செத்தும் கொடுத்தார் சீதக்காதி என்பதற்கு தகுந்த சாட்சியுமாக வழங்கி வருகிறது. மேலே குறிப்பிட்டவைகளிலிருந்து வள்ளல் சீதக்காதி அவர்களைப்பற்றி நமது தமிழக ஆசிரியர்கள் பொறுப் பற்ற முறையில் ஆழந்த சிந்தனை இல்லாமல் வரைந்துள்ள பொய்மைக் கதைகள் இனியும் தொடராது என்பதை நம்புவோமாக! வள்ளல் அவர்களைப்பற்றிய பிரிதொரு செய்தி. நமது வரலாற்றுக்கு எந்த வகையிலும் பொருந்தாததாக வழங்கி வருகிறது. அதாவது தில்லியில் அப்பொழுது முகலாயப் பேரரசராக விளங்கிய ஆலமர் கீர் என்ற ஒளரங்கசீப் கீழக்கரையில் இருந்த இமாம் சதக்கத்துல்லாவற் அப்பா என்ற சூ.பி மகானிடர் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார் (என்றும்_அதனால்-அவரை_தில்லி ப்-பேரரசின்-வங்க)