பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிழக்குக் கடற்கரையும், கீழக்கரையும் வங்கக் கடலின் விரிந்து பரந்த அலைக்கரங்கள் ஒடி ஆடி வந்து இந்தக் கரையை ஒரு நாளைக்கு எத்தனை முறைகள் தான் தொட்டுத் தழுவிச் செல்வது! கிழக்கே இருந்து ஊர்ந்து வரும் கொண்ட ல் காற்று இந்த அலைகளைத்தாலாட்டி மகிழ்வதுடன் அவைகளை வானை நோக்கி எழும்படி ஊக்குவித்து வருவதும் இந்தக் கடலில் நாள்தோறும் காணப்படும் காட்சியாகும். இந்தக் கடற்கரையில் எத்துணையோ ஊர்களு ம. பட்டினங்களும் எழுந்து செழித்து மறைந்தும் போயுள்ளன. இந்தக் கடற்கரையில் சிறப்பு டன் விளங்கிய இருபட்டினங்களை சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. மருங்கூர், சாலியூர் என்ற அந்த இரு பட்டினங்களும் இருந்த சுவடுகளே இந்தக் கடற்கரையில் இன்று இல்லை. கிரேக்க மாலுமி தாலமி குறிப்பிடுகின்ற "அர்ரகார்” என்ற கடற் கரைச் சந்தை யு மச் “பாசா” என்று இலங்கை வரலாறு ابر