பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<@> செந்தமிழ் வள்ளல் சீதக்காதி - י (குறிப்பிடுகின்ற பட்டினமும் உலகப்பயணி இபுனு பதுதா "பத்தன்” என்று குறிப்பிடுகின்ற 'பராக்கிரம பட்டினமும்” இதே கரையில் இருந்து மறைந்து விட்டன. இவையெல்லாம் காலச்சுழலில் கடந்தகால கடற்கரையின் செல்வ வளமை கூறும் சான்றுகளாக விளங்குகின்றன. இந்தப் பட்டினங்களில் விற்பனையான முத்துக்களையும் பிற பொருள்களையும் பெற்றுச் செல்வதற்காகவும், தங்களது நாட்டின் மட்கலங்கள், மதுக்கலசங்கள், மகரவினை, பாவை விளக்கு போன்ற பொருள்களை விற்பனை செய்வதற்காகவும் கிரேக்கர்களும் ரோமர்களும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே வந்து சென்றதைப் பல சங்க இலக்கியங்களில் காண முடிகிறது அந்த இலக்கியங்கள் அவர்களை 'யவனர்கள்” என குறிப்பிட்டுள்ளன. இதனை அடுத்து இஸ்லார் என்ற ஏகத்துவத்தின் பேரொளி அரபுத் தாயகத்திலிருந்து கிழக்கிலும் மேற்கிலும் பரந்து ஒளிர்ந்த கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் அரபுநாட்டு முஸ்லிமர்கள் இந்தப்புனித மண்ணிலே பாதங்களைப் பதித்ததை வரலாறு விளம்புகின்றது. தமிழ்நாட்டின் வடக்கே கோவளத்திலு ர், ம ஒற் மூது பந்தரிலு ர் முறையே நாயகத்தோழர்களான தமீமுல் அன்சாரியும், உக்காசாவும் அடக்கம் பெற்றிருப்பது இங்கு நினைவு கூறத்தக்கது. தமிழ் இலக்கியங்கள் இந்த அரபு நாட்டு வணிகர்களை முதலில் 'யவனர்' என்றும், பின்னர் "சோனகர்’ "துருக்கர்” "மரக்கலராயர்” என்றும் தொடர்ந்து குறிப்பிட்டு வந்துள்ளன. இவர்களது வணிகச் சாத்துக்கள் "அஞ்சுவண்ணம்” என்றும் 'அஞ்சுவன்னம்” என்றும் குறிப்பிட்டுள்ளன. இவர்கள் மேலைக் கடற்கரையைக் கடந்து கிழக்குக் கடற்கரையில் காயல்பட்டினர், கிழக்கரை, பெரியபட்டினம், தொண்டி ஆகிய துறைமுக நகரங்களுடன் வணிகம் மேற்கொண்டதை பல கல்வெட்டு செய்திகள் குறிப்பிடுகின்றன. இவர்கள் اسـ حا