பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண வாழ்த்து - <@> ר (29. முந்துதமிழ்க் கீர்த்தி முடிமேற் றிரண்டதெனச் சந்த்ரகலை யொன்றுஞ் சறுவந்து" மாமுடியான் 30. மெச்சுபுகழ் மாறன் விருந்தளித்துச் சாணகத்தால் எச்சில் தெளித் தானென் றிதயந் தனில் நினைந்து 31. மீனவற்கு நாமும் விருந்தளிக்க வேணுமென்று தானைமன்ன ரெல்லாந் தலைவாசல் காத்துநிற்பப் 32. பொன்கூடந் தன்னிற் புருடரா கத்தளத்தில் தென்கூட லாதிபனைச் சிங்கா சனத்தில்வைத்துச் 33. செங்கனகப் பள்ளயம் பொற் சேனைகால் மீதில்வைத்துப் பங்கயக்கை பூசநறும் பன்னீர் மிகச்சொரித்து. 34. கன்னல்முத்தும் வேயின் முத்தும் கஞ்சமுத்தும் பூகமுத்துஞ் செந்நெல்முத்துந் தந்திமுத்துந் தெங்கின் முத்தும் சங்கின்முத்தும் 35. விலைமதியா நாகமுத்தும் மீனின்முத்து மானின் முத்தும் அலைகடலி லாணிமுத்தும் அன்ன மாகச்சொரித்து 36. மாணிக்கம் பச்சை வயிரம் வயிடுரியங் காணிக்கை யான கறியாக வேபரப்பி 37. நீயருந்தி மிச்சில்வைத்த நித்திலத்தி னெச்சிலுக்கு நாய்பிணங்கு தென்றுபுகழ் நாட்டுபிர தாபதுங்கள் 38. கைதவனுங் கேட்டுக் களிகூர்ந்த தென்றதற்பின் மைதவழுங் கூடமதை வன்னிக் கமுதாக்க 39. ஏதென்றீர் சாளுக மிட்டாற்போ மெங்களெச்சில் சூதொன்று முங்களெச்சில் சுட்டாற்போ மேன்றதுங்கன் 40. நாணித் தலைகவிழ்ந்த நன்மாறன் பொன்மார்பில் மாணிக்கங் கொண்டெறிந்த வச்ரா யுதபாணி 41. பாண்டியன் முன் வந்து நின்று பாவடிகை யாலழுத்தத் தாண்டுபரி மீதேறுஞ் சங்கராம கெம்பீரன் சறுவந்து - தலையில் அணியும் ஒருவகை அணி \ மீனவற்கு - பாண்டிய மன்னனுக்கு أمـ