பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண வாழ்த்து r 175. எற்றுங் குதிரை யிடம்மானந் தான்கலிப்ப வெற்றிநா கேசமென மேளமிக முந்தொனிப்ப 176. தாரை நமரிகொம்பு சத்தமிடு மெக்காளம் வீரகரு ளுவாங்கா வெண்சங்க முந்தொனிப்ப 177 முத்துக் குடையு முழுவயிரப் பொற்குடையும் பத்தியொளி வீசு பவளச் செழுங்குடையும் 178. செம்பொற் குடையுந் திகழும்வெள்ளி வெண்குடையும் சம்பத்தில் வந்துபுவி தாங்காச் சமுத்திரமும் 179. சுற்று நிரைத்துவரத் தூயசிங்க கேதனமும் அற்றமில்லா வீரவெள்ளை யானை நெடுங்கொடியும் 180. பக்கம் பிடிக்கப் பலபேருந் தரம்சூழத் தக்கவியன் மத்தளங்கைத் தாள முழங்கிவர 181. வாய்ச்சங்கு தித்திசுர மண்டலமுங் கின்னரமும் வேய்ச்சங் கிதமுமுக வீணைதண்டை வாத்தியமும் 182. வீணை கயிலாச விணையிசை காமாட்சி வீணருத்ர வீணை விளங்குகிற பாவுடனே 183. சரமண் டலமுடுக்கை சந்திரவளை யங்குளிர நாமண் டலம்புகழும் நல்லிசையார் தாம்வணங்கத் 184. தாளம் வழுவாமற் சங்கீதந் தான்கறங்க மேளம் வழுவாமல் வீதிதொறுந் தான்முழங்கக் 185. கண்டாரா கத்துடனே கல்யாணி காம்போதி கொண்டல்சொரி மேகக் குறிஞ்சிசங்க ராபரணம் 186. தோடி வராளி சுத்ததன்னி யாசிகெளரி பாடிசுதி கூடியிசைப் பாடகர்முன் பாடிவரச் 187. சத்த தளத்திலேழு தாள முழங்கிவர ஒத்தகுச் சாதியுயரசக் கனிவுடனே. 188. பாத முறை தப்பாது பவுரிக்கேற்பக் காதலத்தில் நட்டுவன்மார் கைத்தாள மொத்திடவே கண்டா கானடா என்ற ராகம் حا