பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண வாழ்த்து r 261. 271. .259. 260. 262. 263. 264. 265. 266. 267. 268. 269. 270. 272. அங்கசன்போ ராடு மரிவைமார் கும்பமுலை. எங்கும் பசுந்தேன் இனங்கறுக்க வந்துநிற்பார் திக்கில்மதன் செங்கோல் செலுத்தத் தெரிவைநல்லார் கைக்களிறே நாங்கள் பிடிகானு நில்லுமென்பார் விரவிஅமுதெடுத்த வெண்பாற் கடல்நிகர்ப்பப் பெருகுசுகங் கண்டுவந்த பேரிளம்பெண்ணா ர்சூழ இவ்வாறு மன்னு ரியம்பவகு தைக்கதிபன் அவ்வீதி விட்டங் கடுத்ததொரு வீதிவந்தான் வானடவேடிக்கைகள் ஓங்குபீ ரங்கி உருமேறு போல்முழங்கத் தாங்கியதுண் டுக்குழலுஞ் சத்தவெடி யும்மதிரத் கும்பவெடி செந்தீக் குடக்கைக் கலசவெடி அம்புவெடி பூமி யதிரு மிரட்டைவெடி கைக்குழலும் பட்டைக் கனகுழலாந் தாய்க்குழலும் ஒக்கமருந் திட்டோ ரொருமுகமா கத்தீர பூச்சக்ர வாணமெல்லாம் பொற்பூச் சிதறுநபோல் மாச்சக்ர வாணநெடு வானி லொளிபரப்ப மோகார மண்ட முகடுடைத்துச் சிந்துதல்போல் ஆகாச வாணத் தடங்குகண்டங் கொப்பளிப்பக் கொம்படைப்புச் சக்கரமும் கூட்டு மிசுக்குடனே அம்பரத்தில் மெம்பி யடர்ந்தேறுஞ் சக்கரமும் கொல்லும்படைவாணம் குமாரவா ணத்துடனே செல்லும் எலிவாணஞ் சீறும்பாம் பின்வாணம் பூதவா னங்கள் பொரும்பரிசை வாணமுடன் வீதி நிறை யச்சொரியும் வெண்சா மரைவாணம் மையூத்த விண்ணில் மணிநீலம் வீழ்வனபோல் கையிற் தடித்தநிலா காயாம்பு சிந்தினவே கப்பல்வா னங்கள் கனகுதிரை வாணமுடன் கும்பல்கும்ப லாய்ச்சொரியும் கூடைப் பெருவாணம்