பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<62 செந்தமிழ் வள்ளல் சீதக்காதி (ஆம் ஆண்டு கல்வெட்டில் கீழக்கரையிலும் மற்றும் நாலு பட்டணத்திலுள்ள பதினென் விஷயத்தார் என்ற வாணிபக்குழுவினர் ஒன்று கூடி பிள்ளையார் பூஜைக்கு தர்மமாக அதுவரை நடைமுறையில் உள்ளபடி முத்து விற்பவர்கள் நூறு முத்துக்கு ஒரு குழி முத்து கொடுத்து வந்ததை மாற்றி, நூறு பணத்திற்கு அரைப்பணம் கொடுக்க வேண்டுமென முடிவு செய்ததை இந்த கல்வெட் டு தெரிவிக்கிறது. அடுத்த கல்வெட்டு கி.பி.1545ஆம் ஆண்டைச் சார்ந்ததாகும். இதன் வாசகத்தின்படி அச்சுதராய துர்பிச்சி நாயக்கர் பதினென் விஷயத்தார் என்ற வாணிபக்குழுவினர் "மடிச்சீலை வரி' (துணிவரி) அளிக்க வேண்டுமென்ற நியதியை ஏற்படுத்தியதையும் அவர்களுக்கு காவல் உரிமை வழங்கியதையும் தெரிவிக்கின்றது. மூன்றாவது கல்வெட்டு இராமநாதபுரத்தை ஆட்சிசெய்தி திருமலை ரெகுநாத சேதுபதி மன்னர் (கி.பி. 1645 - 1674) அனுத்தொகை மங்கலமாகிய கீழக்கரை மீனாட்சி சுந்தரேசுவரருக்கு தானமாக ஊர் ஒன்றினை வழங்கியதை தெரிவிக்கின்றது. இந்த மூன்று கல்வெட்டுக்களிலிருந்து அனுத்தொகை மங்கலமாகிய கிழக்கரை கி.பி.1531 முதல் 1545 ஆகிய ஆண்டுகளில் வாணிபத்தில் செழுமை பெற்றிருந்ததையும், அங்கு பதினென் சாத்து போன்ற வாணிபக்குழுக்கள் நிலைபெற்றிருந்ததையும் முத்து, கைத்தறி துணி (மடிச்சிலை) ஆகிய பொருட்களில் சிறப்பாக வாணிபம் நடைபெற்று வந்ததையும் தெரிவிக்கின்றன. இதனைப் போன்றே இந்தப்பகுதி பதினேழாம் நூற்றாண்டில் இராமநாதபுரம் சேதுபதி மன்னரது ஆட்சிக்குள் அமைந்திருந்ததையும் அங்கு மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் என்ற ஆலயம் இருந்ததையும் அறிய முடிகிறது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இன்றைய கிழக்கரை நகரின் தெற்குப் பகுதி இன்றளவும் "தண்டலை மேலக் கரை” என்ற பெயரில் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. தண்டலை என்பது கடற்கரையை அடுத்த செழிப்பான அல்லது பசுமையான பகுதி என்பதாகுக் இன்றும்

  • _

ام י