பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நொண்டி நாடகம் ৰঙ্গ> r ויר ஏதுமற்ற பரதேசி -இவனைக்கை யேற்றுப் பரிகரித்துப் பார்த்திடென்றே தீதற்ற பண்டிதர்க்கு -நூறுபொன் திட்டமாய்ச் சம்பளமுங் கட்டளையிட்டே ( 161 ) காயத்தை யாற்றிக்கொண்டு -கீழக் கரையில் பெரியதம்பி மரைக்காயன் வாயிற் றலத்தில்வந்தால் -உன்னுடைய வறுமை தொலைந்திடுமென் றுறுதிசொல்லி ( 16.2 ) கனதுரை மாமுநயினாப் -பிள்ளையென்மேற் கருணை புரிந்தெழுந் தருளியபின் அனைவோருங் கூண்டிருந்தே யெண்ணெய்க் -காய்ச்சி ஆயசத்ரத்தில் ஒத்திட்டு மருந்தும்கட்டி ( 163 ) பத்தியந் தவறாமல் -சோறும் பசியறிந்தே கொடுத்தார் ருசிபெறவே முத்திரைப் பதமாகக் -கெடுவிட்டு மூன்றுநா ளைக்குள்ளே கடுப்பகற்றி ( 164 ) காயமு நாளுக்குநாள் -குணமாய்க் கருந்தழும் பேறவே மருந்தும்கட்டித் தாயென உபசரித்து -நோய்தீர்த்து தற்காத்து ரட்தித்தார் மிக்காகவே ( 165 ) நடுத்தலம் புகழ்மதவேள் -மாமு நயினா மகிபதி கையினாலே கொடுத்திடும் பணத்தாலே -நானொரு குதிரையும் வாங்கிக்கொண்டேன் சதிருடனே ( 166 ) ஆளொன்று கூட்டிக்கொண்டேன் -செஞ்சியில்வந் தலைந்த பாவமெல்லாந் தொலைந்ததென்றே நாளொன்றும் கேட்டுக்கொண்டேன் -சீக்கிரத்தில் நடந்தேன் தொலைவழி கடந்துசென்றேன் ( 167 ) بـ