பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீழக்கரையில் போர்ச்சுக்கீசியர் கீழக்கரையைப் பற்றி நமக்கு கிடைக்கும் பழமையான ஆவணங்கள் போர்ச்சுக் கீசிய ரு ைட யதாகு ம. ஐரோப்பிய கண்டத்தின் தென்மேற்கு மூலையில் மத்திய தரைக்கடலை அடுத்துள்ள "போர்ச்சுக்கல்” என்பது இவர்களுடைய நாடு. செங்கடல், அரபிக்கடல், இந்து - மகாசமுத்திரம், சீனப் பெருங்கடல் ஆகியவைகளைக் கடந்து கி.பி.எட்டாம் நூற்றாண்டு முதல் அரபு நாட்டு முஸ்லிம்கள் இந்த நாடுகளின் வாணிப வளத்தையும், கடல்வழியையும் தங்கள் கையில் வைத்திருந்தனர். அப்பொழுது அரபு நாட்டில் தோன்றிய இஸ்லாம் மேற்கே ஆல்ப்ஸ் மலைகள், பிரன்னிஸ் மலைகள் ஆகியவைகளைக் கடந்து போர்ச்சுக்கல் நாட்டின் வடபுறத்தில் உள்ள ஸ்பெய்ன் நாட்டில் வலுவாக காலூன்றி இருந்தது. இதனைக் கண்டு பயமும் பொறாமையும் கொண்ட போர்ச்சுக்கல் மன்னர் பிலி ப், அரபு முஸ்லி மக்களது நடமாட்ட மில்லாத புதிய கடல்வழிகளையும், வாணிபத் - திற்கு ஏற்ற நாடுகளையும் கண்டறியும் முயற்சி யில் போர்ச்சுக்கீசிய ரை ஊக்குவித்து வந்தார். இஸ்லாம் என்ற لـ