பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்.எம். கமால் <> (புதிய மார்க்கர் தனது நாட்டிலும் பரவாமல் தடுப்பதும்.) அரபுநாட்டு முஸ்லிம்களது வாணிபச் செழுமையை சிதைப்பதும் போர்ச்சுக்கல் மன்னரது நோக்கமாக இருந்தது. இவரது ஊக்குவிப்பினால் இந்தியா போன்ற கீழை நாடுகளுக்கு புதிய கடல் வழி ஒன்றை கண்டுபிடிக்கும் முயற்சியில் சென்ற கொலம்பஸ் என்ற மாலுமி கி.பி.1492-ல் அமெரிக்கக் கண்டத்தை கண்டு பிடித்தார். இவரைத் தொடர்ந்து வாஸ்கோடகாமா என்பவரும் அவரது குழுவினரும் தெற்கே அட்லாண்டிக் கடல் வழியாகச்சென்று ஆப்பிரிக்கக் கண்டத்தின் Q325e (90sogoroacos “CAPE OF GOOD HOPE" Grørø இடத்தைக் கடந்து வடகிழக்காக மேற்கொண்ட பயணத்தில் கி.பி.1498-ல் நமது நாட்டின் மேற்குக்கரையில் கோழிக் கோட்டில் கரையிறங்கினர். இவரது இலக்கு போர்ச்சுக்கீசியருக்கென தனியான கடல் வாணிபமும் கத்தோலிக்க கிறித்துவப்பிரச்சாரமும் ஆகும். கி.பி.1505-ல் கொச்சியிலிருந்து வாஸ்கோடகாமா கிழக்குக் கடற்கரைக்கு வந்தார். அப்பொழுது அவர் கண்ட காட்சி அவரை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது.ஏனெனில் ஏற்கெனவே கேரளக்கரையிலுள்ள முஸ்லி மக்கள் வாணிபத்தில் மிகவும் சிறப்புற்று விளங்கி வந்தனர். அதற்கு கோழிக்கோடு மன்னர் எய மோரின் உறுதுணையாக இருந்தார். ஆனால் இங்கு தூத்துக்குடி, காயல்பட்டனர் பகுதியில் இருந்த முஸ்லிம்கள் வெளியார் உதவி எதுவுமின்றி அவர்களே கடல் வாணிபத்தில் ஒப்பாரும் மிக்காருமின்றி உயர்ந்து நின்றனர். அவர்களது செல்வச்சிறப்பும், வாணிபத்தின் வளமையும் அவர்களை தன்னரசு மன்னர்களைப்போல பெருமை பெறச் செய்திருந்தன. இதனைக் கண்ட வாஸ்கோடகாமா அவர்களது வானிய | வளத்திற்கு உறுதுணையாக பரவர் இனமக்கள் பயன்பட்டு வருவதையும் குறிப்பாக கடல் அடியிலிருந்து முத்துக்களை வெளிக்கொணர்வதற்கு அவர்கள் உதவியதையும் அந்த முத்துக்கள் முஸ்லிம்களது வாழ்க்கை நிலையின் உயர்வுக்கு (ஆதாரமாக இருப்பதையும்-உணர்ந்தார்._இதனால்)