பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்.எம். கமால் <> செங்ககால இலக்கியங்களிலும் இந்த முத்துக்கள்) இடம்பெற்றுள்ளன. குறிப்பாக சிறுபாண் ஆற்றுப்படை, புறநானூறு, மதுரைக் காஞ்சி, முத்தொள்ளாயிரம் ஆகிய இலக்கியங்களில் தென்கடல் முத்துக்களைப் பற்றிய குறிப்புக்கள் 67ራፓ/ፓጬፖØ /ፖõ கொடுக்கப்பட்டுள்ளன. சோழப்பேரரசின் பொழுது இந்த முத்துக்கள் தஞ்சாவூருக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள பெரிய கோயிலின் இறைவருக்கு தானமாக வழங்கப்பட்டதை அங்குள்ள கல்வெட்டுக்களிலிருந்து தெரிந்து கொள்வதுடன் அந்த முத்துக்களில் பல வகை இருந்ததை யு. ம அந்த கல்வெட்டுக்கள் நமக்கு உணர்த்துகின்றன. இளங்கோ அடிகளது சிலப்பதிகாரத்தில் கண்ணகியை புகழும் கோவலனது கூற்றாக "மாசறு பொன்னே, வலம்புரி முத்தே' என குறிப்பிடுவதிலிருந்து முத்திலும் வலம்புரி முத்து என்ற ஒரு வகை இருந்ததை அறிய முடிகிறது. இது போலவே கிழக்கரை சொக்கநாதர் கோவில் கல்வெட்டில் “குழி முத்து' என்ற ஒரு வகை குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பான முத்துக்களை நம்மிடமிருந்து பெற்றுச் செல்வதற்காக யவனர்களும், அரபு முஸ்லிம்களும் கிழக்கரைக்கு வந்துசென்றனர் என்பது வரலாற்றுச் செய்தி. மேலும் ரோமாபுரியிலுள்ள அரசியும், அழகிகளும் இந்த முத்துக்களை மிகவும் விரு மச்பி வாங்கி தங்களது அணிமணிகளிலும், காலணிகளிலும் பொருத்தி அலங்காரம் செய்து கொண்டதன் காரணமாக ரோமநாட்டு தங்கம் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்பட்டு ரோமாபுரியின் அரசுக் கருவூலம் காலி யானது என்ற செய்தி யு மீ. வரலாற்றில் பதிவு | பெற்றுள்ளது. கி.பி. பனிரெண்டார் நூற்றாண்டிலே அரபுநாட்டு முஸ்லி மக்கள் முத்து வணிகத்திற்காகவே காயல்பட்டினம், கீழக்கரைப் பகுதிக்கு வருகை தந்ததுடன் இங்கேயே நிலையாகத்தங்கி தமிழ் முஸ்லிமீகளாகி முத்து வணிகத்தில்