பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 செந்தமிழ் வள்ளல் சீதக்காதி r மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். இத்தகைய வணிகர்களைக் கண்டுதான் வாஸ்கோடகாமாவும் அவரது குழுவினரும் அதிர்ச்சியடைந்தனர் என ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளோர். י அப்பொழுது இலங்கைக்கும் திருவடி தேசமென வழங்கப்பட்ட மலபாருக்கும் இடையில் நல்ல வணிகத் தொடர்புகள் இருந்து வந்தன. குறிப்பாக மன்னார் வளைகுடாப் பகுதியில் கிடைக்கப் பெற்ற முத்துக்கள் மலபாருக்கும், குஜராத்திற்கு மர் எடுத்துச் செல்லப் பட்டு அங்கிருந்து அரேபியாவிற்கும் கொண்டு செல்லப்பட்டன. மேலும் வரலாற்று ஆசிரியர் டாக்டர் அப்பாத்துரை என்பவர் "இராமேஸ்வரம் நன் முத்துக்கள்” கோழிக் கோடுக்கு அனுப்பப்பட்டு அங்கிருந்து பல நாடுகளுக்கும் அனுப்பப்பட்டதாக குறிப்பிட்டிருப்பது இங்கு ஒப்பு நோக்கத்தக்கதாக உள்ளது. அப்பொழுது இந்தப்பகுதி முழுவதும் மதுரையில் புதிதாக தோற்று விக்கப்பட்டிருந்த நாயக்க அரசின் ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்தது. மதுரை நாயக்க மன்னருக்கு நெருக்கமாக இருந்த துர்பிச்சி நாயக்கர் என்ற பரமக்குடி பாளையக்காரரது அனுமதி பெற்று இருந்த கிழக்கரை நெய்னார் என்பவர் அந்தக்கடல் பகுதியில் கப்பல்கள் நடமாட்டத்திற்கும், முத்துக்கள் எடுப்பதற்கும் உரிமங்கள் வழங்கி வந்தார். இதன் வழி பெரும் ஆதாயத்தின் ஒரு பகுதியினை பரமக்குடி பாளையக்காரருக்கு அவர் செலுத்தி வந்தார். இதனை அறிந்த போர்ச்சுக்கீசியர் பரமக்கு டி பாளையக்காரரை அணுகி அவருக்கு கையூட்டு வழங்கி கிழக்கரை நெய்னாருக்குப் பதிலாக கீழக்கரை கடற்பகுதியை அவர்களது பொறுப்பில் வைத்துக்கொள்வதற்கு அனுமதி பெற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு சற்று முன்னதாக கி.பி.1515-ல் இந்தப்பகுதிக்கு வருகை தந்த போர்ச்சுக்கீசிய நூலாசிரியர் 'துர்ரத் பர்போஸா” என்பவர்; அப்பொழுது கிழக்கரைப்

  • நெய்னார் என்பது அரபி மொழி பெயர்ச்சொல். தலைவர்

என்ற பொருளை உடையது.