பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்.எம். கமால் <@ (தண்டல், சிராங்கு, சமோட்டி போன்ற_பணிகளில் பலர்) பணியாற்றி வந்தனர். இவர்களில் சிறப்பானவர்கள் பெயர்களில் இன்றும் கீழக்கரையில் ஈசாதண்டல் தெரு, நெய்னா முகம்மது தண்டல் தெரு, பரப்பான் சமமாட்டி தெரு ஆகியன கீழக்கரை பேருராட்சியின் பகுதிகளாக இருந்து வருகின்றன. கி.பி.பதினாறாம் நூற்றாண்டில் இத்தகைய வாணிபத்தில் ஈடுபட்டு பெரும பொருளைக் குவித்தவர்கள் சீதக்காதி மரைக்காயர் அவர்களது முன்னோர்களாகும். ஏறத்தாழ தன்னரசு மன்னர்கள் போன்று கிழக்கரையில் அவர்கள் வாழ்ந்து வந்தனர். இதனை ஒரளவு எடுத்துக்காட்டும் வகையில் கீழக்கரை பழைய குத்பா பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் வள்ளல் சீதக்காதி அவர்களது தாய் வழிப்பாட்டனார் வாவாளி மரைக்காயர் அவர்களது மீளவான்களும் மேலும் அவர்களது முன்னோர் மீஸான்களும் அழகாகவும், கலைச்சிறப்புடனும் அ ைமக்கப்பட்டுள்ளன. கீழக் கரையில் எந்த முஸ்லி மர் பெருமக்களுக்கும் இல்லாத வகையில் இந்த மீளவான்கள் (நடு கல்) அமைக்கப்பட்டிருப்பதால் வள்ளல் சீதக்காதி மரைக்காயரது முன்னோர்கள் அவரை விட மிகவும் சிறப்பாக வாழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை வடிவமைத்த கல்தச்சர்கள் வேறு சமயத்தைச் சார்ந்தவர்களாக இருந்ததாலும், திருக் கோயில் பணிகளில் அனுபவம் பெற்றவர்களாக இருந்ததாலும் மேலே சொல்லப்பட்ட மீஸான் கற்கள் திருக்கோயில்களில் காணப்பெறும் திருவாட்சி போன்ற அமைப்பில் அழகாக செய்யப்பட்டு அவைகளில் நல்ல தமிழச் சொற்கள் பொறிக்கப்பட்டுள்ளன. (இந்தக் கல்வெட் டுக்களின் நகல்கள் நூல் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது). கீமுக்கரைக்குக் கிழக்கே வேதாளை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள வள்ளல் சீதக்காதி அவர்களது சகோதரர் சேகு இபுறாகீமர் மரைக்காயர் அவர்களது மீளவானில் a/a7a9/