பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்.எம். கமால் 47 /ー மேலும் சேதுபதி மன்னரைப் போன்ற ஒரு தன்னாசு) மன்னர் எவ்விதம் நிர்வாகம் நடத்த வேண்டும், எத்தகைய முறையில் வெளிநாட்டவரையும் தனது குடிமக்களையும் சந்திக்கவேண்டும், அதற்கான நெறிமுறைகளை எவ்விதம் அ ைமத்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் C/ (/l) ஆலோசனைகளை மரைக்காயர் அவர்கள் எடுத்துக்கூறியது மன்னருக்கு மிகவும் இணக்கமானதாகவும், இயல்பானதாகவும் தெரிந்தது. இதனால் மரைக்காயரது ஆலோசனையின் பெயரில் புகலூருக்குப் பதிலாக இராமநாதபுரம் கோட்டை சேதுபதி சீமையின் தலைநகராக மாற்றம் பெற்றது. இதன் மூலமாக சேதுபதி மன்னரை மற்ற அரசர்களு க், வெளிநாட்டு வர்த்தகர்களும் நேரில் அணுகுவதற்கும், மன்னரிடம் தொடர்பு கொள்வதற்கும் இந்தப்புதிய தலைநகர் ஏற்றதாக அமைந்தது. அப்பொழுது இராமநாதபுரம் கோட்டை (தற்பொழுதைய கடை விதி யு மி அரண்மனைப் பகுதி யு மi, தெற்கிலு மச் வடக்கிலுமுள்ள குடியிருப்புகளைக் கொண்டதாக இருந்தது) மண் சுவர்களாலான சாதாரணக் கோட்டையாக இருந்தது. இதனை வலிமை மிக்க அரனாக மாற்றியதிலும் நமது மரைக்காயர் அவர்களுக்கு பெருமர் பங்கு உண்டு. சுமார் இரண்டு மைல்களுக்கும் அதிக சுற்றளவுடன் செவ்வக வடிவில் கிழக்கில் மட்டும் ஒரு பெரும தலைவாயிலுடன் இந்தக் கோட்டையை மரைக்காயர் அவர்கள் நிர்மாணிக்க உதவினார். கல்லாலான இந்தக் கோட்டையின் சுவர்கள் 27 அடி உயரமும், 5 அடி அகலமும் உடையதாக இருந்தது. இந்தக்கோட்டை மதிலில் ஆங்காங்கு நான்கு புறங்களிலும் கொத்தலங்கள் அமைத்து 32 பெரிய பீரங்கிகள் நிறுத்தப்பட்டன. அத்துடன் மன்னர் நிர்வாகத்திற்கு ஏதுவாகவு ச் சில பொழுது மன்னர் தங்குவதற்குகாக கோட்டையின் அரண்மனை வளாகத்தில் ஒரு பெரிய தர்பார் மண்டபத்தையும் நிர்மாணிப்பதற்கு மரைக்காயர் அவர்கள் உதவினார். இந்த மண்டபமர் இப்பொழுது “இராமலிங்க விலாசம் அரண்மனை ” என வழங்கப்பட்டு (வருகிறது. أمـ