பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II 'நெஞ்சம் மறப்பதில்லை" வள்ளல் சீதக்காதியைப் பற்றிய இந்த வாழ்க்கை வரலாற்று நூலினை மிகக் குறைந்த காலத்தில் அமைத்து வெளிவருவதற்கு காரணமானவர்களை இங்கு குறிப்பிடவேண்டியது எனது தலையாய கடமையாகும். எனது உடல் நலக் குறைவினாலும், கண்பார்வை நலிவினாலும் சோர்ந்து போன நிலையில் இந்த நூல் வள்ளல் சீதக்காதி நினைவு விழா வெளியீடாக வெளிவருவதற்கு எனது கண்களாக பயன்பட்டு பல நூல்களின் ஆதாரங்களை திரட்டித் தந்த ஜனாபா சர்மிளா சமீமையும், இந்த நூல் முழுமையும் உருப்பெறுவதற்கு எனது கரங்களாக பயன்பட்டு எழுத்துப்பணியை முழுமையாக செய்து முடித்த அருமைச் சகோதரர் கீழக்கரை ஜனாப் K.M.S. சதக்கத்துல்லாவற் அவர்களையும் இந்த நூலின் அச்சுப்படிகளை ஆர்வத்துடன் திருத்தி செம்மை செய்து அளித்து உதவிய பேராசிரியர் மை. அப்துல் சலாம் அவர்களையும் இந்த நூல் உருவாவதற்கு உற்ற துணையாக விளங்கிய கீழக்கரை வள்ளல் சீதக்காதி நினைவு விழாக்குழுவினரையும் இந்த நூல் குறுகிய காலத்தில் அச்சிட்டு வெளிவருவதற்கு உதவிய கீழக்கரை K.M.S. கம்ப்யூட்டர் பிரிண்டர்ஸ் நிறுவனத்தையும் மறப்பது என்பது இயலாததாகும். இவர்கள் அனைவருக்கும் எனது அன்பு கலந்த ஆழிய நன்றியை உரித்தாக்குகின்றேன். டாக்டர் S.M. கமால் 10.12.2000 (நூலாசிரியர்)