பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்.எம். கமால் <ঠ> (வந்த பொழுது, பரவர்களுக்கும், முஸ்லிம் மரைக்காயர்களுக்கும்) இடையே ஏற்பட்ட சிறுசிறு பூசல்களைப் பெரிதாக்கி மரைக்காயர், αναωνα" உறவுகளில் பெருத்த பிளவினை ஏற்படுத்தியது இதற்கு முக்கிய காரணமாகும். ஆண்டாண்டு காலமாக கடல் தொழிலில் மரைக்காயர்களிடம் அடிமையாக கட்டுப் பட்டு அவர்களது வாணிப வளத்திற்கு உதவிய பரவர்களை கி.பி.1557- ல் மதமாற்றம் செய்து அவர்களது நாட்டு (போர்ச்சுக்கல்) குடி மக்களாக மாற்றி அவர்கள் குடியிருப்புகளுக்கு பாதுகாப்பு கொடுத்து அவர்களது உழைப்பையும், பொழுதையும் தங்களது நலனுக்காக பயன்படுத்தி வந்தனர். காயல்பட்டினர், துரத்துக்குடி மரைக்காயர் தங்களது சொந்த ஊர்களிலிருந்து வெளியேறி பல இடங்களிலும் குடியேறினர். ஆதலால் அந்தப் பகுதியில் உள்ள பரவர்கள் பொருளாதார வகையில் உயர்வும், சிறப்பும் பெற்றிருந்ததால் இராமநாதபுரம் சேது மன்னரது ஆட்சிக்கு உட்பட்டு உரிய தீர்வைகளை செலுத்துவதற்கு இனங்காமல் வீணான சச்சரவுகளில் ஈடுபட்டு வந்தனர். இதனைச் சமாளிப்பதற்காக தமது விஜயரகுநாத பெரிய தம்பியான சீதக்காதி மரைக்காயரை சேதுபதி மன்னரது அதிகாரமர் பெற்ற பிரதியாக நியமனம செப்தார். அடிக்கடி திருநெல்வேலிப் பகுதிக்கு மரைக்காயர் சென்று வர வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதனைப் போன்று இன்னொரு பிரச்சினை. தொன்று தொட் டு மன்னார் வளைகுடாவின் எதிர்க்கரையான இலங்கையில் மன்னார் வரை கடலில் முத்துக்குளிக்கும் உரிமையை சேதுபதி மன்னர்கள் பெற்றிருந்தனர். குறிப்பிட்ட | காலத்தில் சேதுநாட்டு முத்துக்குளிப்பவர்களை ஏற்றிக்கொண்டு செல்லும் படகுகள் மன்னார் பகுதியில் ஒரிரண்டு மாதங்கள் தங்கியிருந்து முத்துச்சிலாபம் முடிந்தபிறகு சேது நாட்டு கடற்கரைக்கே திரும்புவது வழக்கம். ஆனால் அப்பொழுது இவ்விதம் முத்துச்சிலாபத்திற்கு சென்றிருந்தவர்களில் சிலர் اسـ فا