பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்.எம். கமால் <ঠ> r காரணம், அன்றைய தமிழக அரசியல் சூழநிலைதான். கி.பி.14 ஆம் நூற்றாண்டில் வட வேங்கடத்தைக் கடந்து தமிழகத்தில் புகுந்த வடுகர்கள் தமிழகத்தின் அரசியலை தமதாக்கி ஏறத்தாழ 5' 20 ஆண்டுகளுக்கு Gω ουσ45 தமிழகத்தை விஜயநகரப்பேரரசின் ஒரு பகுதியாக அமைத்து விட்டனர். அவர்களது தாய்மொழி தெலுங்காக இருந்ததால் அந்த மொழியும் ஆரியர்களது வடமொழியை மூலமொழியாகக் கொண்டிருந்ததால் விஜயநகர மன்னர்கள் அவர்களது ஆட்சியில் தெலுங்கிற்கும், வடமொழிக்கும் மட்டுமே ஊக்குவிப்புகளை அளித்து உதவி வந்தனர். தமிழ் மொழி அரசியல் செல்வாக்கை இழந்ததுடன் மக்களது ஆதரவின்றி தடுமாறிக் கொண்டிருந்தது. தமிழைக் கற்பித்து வந்த தமிழிப் புலவர்கள் வறுமையில் வாடினர். 'சனியான தமிழைவிட்டு சதிராடக் கற்றோம் இல்லையே" என சஞ்சலப்பட்டனர். இத்தகையதொரு அவல நிலையில் தமிழை யார்தான் முறையாகக் கற்று தமிழ் இலக்கியம் படைக்க முன் வருவர். தமிழ் இலக்கிய வரலாற்றினை ஆய்வு செய்தால் தமிழகத்தை கி.பி.15 ஆம் நூற்றாண்டு முதல் 77 ஆம் நூற்றாண்டு வரை தமிழிப் புலவர்கள் தமிழக்காப்பிய மீ எதனையு மச் இயற்றவில்லை என்பது புலனாகுக் என்றாலும் தமிழை தங்களது தாய் மொழியாகக் கொண்டிருந்த தமிழ முஸ்லிக்கள் தங்கள் மொழியின் மீதுள்ள பற்றின் காரணமாக இந்த நெருக்கடியான நிலையில் பிற சமூகத்தினரைவிட தமிழ் மொழிக்கு பல இலக்கிய அணிகளைச்சூட்டி மகிழ ஆர்வத்துடன் முன் வந்தனர். அதிலும் கிழக்கரையைச் சேர்ந்த தமிழ முஸ்லிம் ஒருவர்தான் தமிழில் முதலாவது இஸ்லாமிய இலக்கியத்தை படைத்தளிக்குச் பெருமை பெற்றார். வண்ணப் பரிமளப் புலவர் என்ற கிழக்கரைப் பெருமகன் அந்த முதல் இலக்கியத்தை (7000 மசாலா என்ற அதிசய புராணம்) கி.பி.1572 -ல் இயற்றி மதுரை தமிழச்சங்கத்தில் அரங்கேற்றினார்.