பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்.எம். கமால் r י இந்த நூலின் ஏடுகளின் சுவையை மென்று சுவைத்த சிதலைகள், நாற்பது கண்ணிகளை முழுமையாக விழுங்கி விட்டன. எஞ்சியுள்ள நானுறு கண்ணிகளும் சிற்றிலக்கியங்களுக்குரிய தசாங்கத்தில் தொடங்கி, வாழத்துடன் நிறைவு பெறுவதுடன், நமது அகக்கண்களில் வள்ளலது திருமண நிகழ்ச்சியை நிறுத்தி அந்த நறுமணத்தில் நம்மையும் கலந்து மகிழச் செய்கின்றன. நாளை வதுவையென நல்லவர்கள் நிச்சயித்து விட்டனர். மணமகள் மாளிகையில் மங்கலக்கால் நாட்டப்படுகிறது. மூங்கில் கால் அல்ல பவளக்கால். பந்தர் தயாராகிறது. மறுக்கலவாத செர்பொன் வளை வெள்ளியினால் குறுக்கு வளை, வச்சிரத்தை இழைத்த வரிக்கைகள், பச்சை மரகதத்தால் பலகணிகள், அவைகளைப் பிணிக்க கனகக் கம்பிகள். தங்கத் தகட்டால் சாளரங்கள் மாணிக்க மணிக்கொடுங்கைகள், ஆணித்தரளத்தில் அணி அணியாக துக்கப்படுகின்றன. நீலமணி, கோமேதகம், வைடுரியம், புருடராகம், பவளம், பதுமராகம் - சரங்கள் பத்தி, பத்தியாக தொங்கவிடப்படுகின்றன. இன்னும் மயக்கும் எழிலும், மணமும் சேர்க்கும் வகையில் மல்லிகை செண்பகம், முல்லை, பிச்சி, செங்கழுநீர் செந்தாழை, பைங்கமலம், பாதிரி, மந்தாரம் இருவாட்சி, பொற்கொன்றை, செவ்வாம்பல், செவ்வந்தி, மாதுளம், நீலோற்பம் - இந்த மலர்கள் இசைந்த சரங்கள் பந்தரிடமெல்லாச் பரந்த விதானமாக விரிக்கப்பட்டன. பூங்கமுகு பாலை, தென்னம்பூவிரி ,தேங்கதலி தார், செவ்விளநீர், கொழுஞ்சி, கூழைப்பலா, எலுமிச்சை கரும்பு கதலி க்காய், கமுகுக்காப் - இவையனைத்தும் குலைகுலையாக பந்தரைச் சுற்றித் துரக்கப்படுகின்றன. வானவில்லைப் போன்ற வண்ணச் சேலைகள் பின்னணியில் வகை வகையான விளக்குகளும், திறைகுடங்களும் மங்கலக் காட்சியாக மிளிர்கின்றன. மணவிழாவிற்கு மணமகன் புறப்படுவதற்கு அலங்காரம் மேற்கொள்ளப்படுவதை புலவர் சொல்லுகிறார்: اس حا