பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<@2_ செந்தமிழ் வள்ளல் சீதக்காதி r "சம்பங்கி பூந்தைலம் தான்முடியில் கோதி அம்பொன் கும்ப நிறையும், குளிமஞ்ச னஞ்சொரிந்தார் பூந்து கிலா லீரம் புலரப் புலர்த்தியபின் வாய்ந்தபசும் பொன்னாடை வர்க்கந் தெரிந்தெடுத்து வன்னச் சுளிகை வரிசை நிசாரணிந்து பொன்னினரை ஞானும்வச்ரப் பூட்டுமுருக் காணியிட்டுப் பொன்னம்பர் கஸ்தூரி பூம்பன்னிர் சந்தனமும் தென்னம் புழுகுசவ்வா தெல்லாம் புயத்தணிந்து தோற்றுமணி வச்ராங்கிச் சோடணிந்து மேதினியோர் போற்றி விலைமதியாப் பொன்னினடுக் கட்டிறுக்கிப் பச்சை மணியுதர பந்தனமுஞ் சேர்ந்திலங்கும் வச்சிரத்தி னாலிழைத்த வாகுவல யம்புனைந்து வாகுபந்த னம்பூட்டி வயிரத்துறா அணிந்து நாகரிகக் கைமேலே ரத்னகங்க ணம்புனைந்து சீவரத்னத் தாலிழைத்த செய்யவீர வாளியிட்டுக் காவையொத்த கைமேல் கரபந்த னந்தரித்துத் தண்டரள மாலிகையுந் தங்கச் சரப்பளியும் கண்டசர மும்பொற் கணபதக்க முந்தரித்து பொன்னார மாலையிட்டுப் பூச்செண்டு கைப்பிடித்து மின்னார் குரவையிட வெள்ளானை யேறினனே... கல்யான ஊர்வலம் ஊர்ந்து செல்கிறது. ஊர்வலத்தில் அரசர் மக்கள் செல்லுகின்றனர். துனியும் வில்லும் பிடித்த தொட்டியர் கேடயமும், வாளும் பிடித்த குதிரை ராவுத்தர் கட்டியக்காரர். சந்திரனைச் சூழந்து வரும் தாராகனம் போல இளைஞர் இசைக் கலைஞர் ஆகியோர் மணமகளை மொய்த்துச் செல்கின்றனர். அப்பொழுது முழங்கிய இசைக்கருவிகள்தான் எத்தனை? திமிரி, தடாரி, குடமுழவு, வீராணம், பேரிகை, பம்பை, பெருமுரசு, மல்லாரி, நாதசுரமர் இன்னும் ஆனை, குதிரை, ஒட்டகை மேல் டம்மாரம் - மேளம், கொம்பு எக்காளர், தாரை, நமரி, வாங்கா, வெண்சங்கு, வேங்குழல், மத்தளக் கின்னரர். வினை ஆகியவைகளும் முழங்கிச் செல்கின்றன. امـ