பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்.எம். கமால்' <> r இன்னொரு செய்தி. இராமநாதபுரம் கிழவன் ரெகுநாத) சேதுபதிக்கும், வள்ளல் சீதக்காதி மரைக்காயருக்கும் அன்னியோன்யமான தொடர்பு இருந்ததை உறுதிப்படுத்தும் வகையில் மரைக்காயருக்கு இராமநாதபுரமர் கோட்டைக்குள் ஒரு மாளிகை இருந்தது என்ற புதிய தகவலும் இந்த நூலில் இடம்பெற்றுள்ளது. இந்த இலக்கியத்தின் கதாபாத்திரமாகிய நொண்டி பாடும் சந்தப்பாடல்கள், அவனது பெயருக்கு ஏற்றவாறு விட்டு இசைப்பனவாக உள்ளன. அந்தப் பாடல்களில் இனிய சந்தச்சுவையும், எளிதில் விளங்கும் சொற்களும் நாடகம் முழுவதும் விரவி நின்று கேட்பவர்களுக்கு மகிழ்ச்சி ஊட்டுவனவாக அமைந்துள்ளன. இந்த நூல் முழுமையும் மனோரமயமான ராகங்களான பூபாளம், நாதநாமக்கிரியை, மோகனர் போன்ற பண்களால் புனையப்பட்டு ஆதி தாளத்தில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த நாடகத்தில் பயன்படுத்தப்பட்ட இசைக்கருவிகளைப்பற்றிய குறிப்புகளும் இந்த நூலில் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியத்தில் மிகவும் அரிதாகக் கிடைத்துள்ள சில நொண்டி நாடகங்களில் இந்த நாடகம் காலத்தால் முற்பட்டவையாகவும், வரலாற்றுச் செய்திகளையும் கொண்ட தொன்மையான நாடகமாகவும் கருதப்படுகிறது. இந்த நூல்கள் இயற்றப்பட்டதின் வழியாக சீதக்காதி மரைக்காயரது இலக்கிய ஆசை ஒரளவு நிறைவு பெற்றது என்றே கூறலாம்.