பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்.எம். கமால் <> பெற்றுள்ள தப்லே ஆலம் என்று புகழப்பட்ட பாபா நத்ஹரி வலி அவர்களும், அடுத்து பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் சோழ மண்டலம் முழுவதும் தீனின் சுடர் ஒளிபடச் செய்தவர் நாகூர் ஆண்டகை எனப் போற்றப்படும் சாகுல் ஹமீது வலி அவர்களாகும். இவர்களை அடுத்து தமிழகத்தில் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுள்ள ஆயிரக்கணக்கான முஸ்லிம்களுக்கு சரியான ஆன்மீக விளக்கத்தை அளித்து மக்களை ஏகத்தவ நெறியில் இனணந்து வாழ வழிகாட்டியவர்கள் இமாம் ஆவார். இந்த காரணத்தினால்தான் இமாச் அவர்களது காலத்தவரான சீறாப்புராணம் பாடிய உமறுப்புலவர் அவர்கள் |r நம்மை யாளுடையோன் வேத நபிதிரு வசனந்தீனோர் சம்மதித் திடப்பா ரெல்லாந் தழைக்கவே விளக்கஞ் செய்தோ ரிம்மையு மறுமை யும்பே றிலங்கிய சதக்கத் துல்லா. செம்மல் ரடியி ரண்டுஞ் சிந்தையி லிருத்தி னேனே என அப்பா அவர்களது பெருமை துலங்கப்பாடியுள்ளார். இமாச் சதக்கத்துல்லாஹற். அப்பா என பிற்காலத்தில் போற்றப்பட்ட பெருமைக்குரிய புனிதர் கி.பி.7632 ல் காயல்பட்டினத்தில் பிறந்தார். அவரது பெற்றோர்கள் சுலைமான் ஆலிம் - பாத்திமா பீவி ஆவர். மிகச்சிறந்த மார்க்க மேதைகளின் வழியில் வந்த சுலைமான் ஆலிமின் ஐந்து புதல்வர்களின் சதக்கத்துல்லாஹற். அப்பாவும் ஒருவர். இளமைப்பருவத்தில் சோழ மண்டலத்திலுள்ள அதிராமபட்டினத்தில் மிகச்சிறந்த மார்க்க மேதையாக விளங்கிய சின்ன நெய்னா லெப்பை ஆலிம் என்ற சான்றோரிடம குரான் ஷரீ ைபயு க், ஹதீஸை யு ர், பிக்ஹறிகளையும் ஐயமறக்கற்றுணர்ந்தார். ஆன்மீகத்தில் முழுமையான தேர்ச்சி பெற்ற சதக்கத் துல்லாவற் ஆலிம் அவர்கள் பல ஆண்டுகளுக்குப் பிறகு காயல்பட்டினம் திரும்பினார். அங்குள்ள இஸ்லாமிய மக்கள் ஒரு மார்க்க அறிஞருக்கு அளிக்க வேண்டிய மதிப்பையும், மரியாதையையும் மறந்து அவரை நடத்தியது அவருக்கு மிகுந்த சஞ்சலத்தை ஏற்படுத்தியது. فا