பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

K(x കെ.കിഴ வள்ளல் சீதக்காதி r இந்த சமயத்தில் அதிராமபட்டினத்தில் அவருக்கு ஆசானாக அமைந்து மார்க்கக் கல்வி புகட்டிய சின்ன நெய்னா ஆலிம் அவர்கள் கீழக்கரையில் வந்து தங்கியிருந்து (பழைய குத்பாப் பள்ளித்தெரு) மார்க்கக் கல்வியைப் பயிற்றுவிப்பதற்கு மத்ரஸா ஒன்றை நிறுவி இருந்தார். சில ஆண்டுகளில் ஆலிம் அவர்கள் காலமாகி விட்டதால் மக்களுக்கு மார்க்க போதனை அளிக்கத்தக்க ஆலிம ஒருவர் இல்லாத நிலையை அறிந்து சதக்கத்துல்லாஹற். அப்பா அவர்கள் கீழக்கரைக்கு கி.பி. 1654 - ல் வந்து சேர்ந்தார்கள். அப்பொழுது மனித நடமாட்டம் மிகுதியாக இல்லாத (இன்றைய) ஒடக்கரைப் பள்ளிக்கு மேற்கே ஒர் மத்ரஸாவினை சதக்கத்துல்லாஹ ஆலிம் அவர்கள் நிறுவி தங்களது மார்க்கப் பணியைத் தொடர்ந்தார்கள். இமாம் அவர்களது எடுப்பான தோற்றம், 'கனிவான பேச்சு, பயான் சொல்லும் பர்ங்கு, தம்மிடம் வரும் முஸ்லிம்களிடம் நடந்து கொள்ளும் பண்பு ஆகியவைகளினால் இமாம் அவர்களுக்கு மிக விரைவிலேயே கீழக்கரை மக்களது ஆதரவுச் செல்வாக்கும் தொடர்ந்தது. இத்தகைய இணையற்ற இமாம் அவர்களது தொடர்பு வள்ளல் சீதக்காதி மரைக்காயர் அவர்களுக்கு ஏற்பட்டது அவரது வாழக்கையில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது. பல நாடுகளிலிருந்தும் வாணிபத்தின் வழியாக சம்பாதித்த, ஹலாலான திரவியத்தை இறைவனது பாதையில் செலவழிப்பதற்கு ர் ஏழை எளிய மக்களது துயர் துடைப்பதற்கான துணிவினை அவருக்கு ஊட்டியது இமாம் அவர்களது போதனையாகும். செல்வத்தின் பயன் ஈதல் என்ற உயர்ந்த கொள்கையைக் கொண்டு வாழ்நாளெல்லாம் மிகச்சிறந்த வள்ளலாக மரைக்காயர் அவர்கள் வாழந்ததற்கு இமாச் அவர்களது வழிகாட்டுதலே காரணமாகும் என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சேது நாட்டின் வட கோடியில் வாழ்ந்த வள்ளல் பாரிக்குப்பிறகு சேதுநாட்டின் தென்கோடியில் வாழந்த ஒரே வள்ளல் சீதக்காதி மரைக்காயர் மட்டுமே. اسـ ہا