பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்.எம். கமால் - <@ r تا அல்ல. ஆனால் ஏற்கனவே கிழக்கரையின் மீன்காரத்தெருவில் பள்ளி ஒன்று நிர்மாணிக்கப்பட்டு மக்களது பயன்பாட்டில் இருந்து வந்ததும், அதில் போதுமான இடவசதி இல்லை எனபதையும் மரைக்காயர் அவர்கள் நன்கு அறிந்திருந்தார். என்றாலும் புதிய பள்ளியை அமைப்பதின் மூலம் அந்தப்பகுதி மக்களது வெறுப்பிற்கு ஆளாகிவிடுவோமோ என்ற ஐயமும் அவருக்கு இருந்தது. அத்துடன் ஒரே ஊரில் இரு பள்ளிகளில் வழமையான ஐந்து வேளைத் தொழு கை யு டன் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையையும் நடத்துவது மார்க்க நெறிமுறைகளுக்கு உகந்ததாக இருக்குமா எனபதும் அவரது சிந்தனையில் சலனத்தை ஏற்படுத்திக் கொண்டே இருந்து வந்தது. ஒரு நாள் தமது ஐயப்பாடுகளை தமது ஆன்மீக ஆசானாகிய சதக்கத்துல்லாஹற். அப்பா அவர்களிடமே தெரிவித்து தக்க ஆலோசனை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். இமாச் அவர்களும் ம் ரைக்காயரது ஐயப்பாடுகளை தெளிவு படுத்தியதுடன் புதிய பள்ளியை அமைப்பது பற்றிய ஆலோசனைகளையும் வழங்கினார்கள். அவைகளின் மறு உருவாக எழுந்ததுதான் இன்றைய ஜாமிஆமஸ்ஜித் என வழங்கப்படும் சீதக்காதி மரைக்காயரது தொழுகைப் பள்ளியாகும். தமிழகத்தில் இஸ்லாமியரது வழிபாட்டுக்கென கட்டப்பட்ட மிகச்சிறந்த கட்டுமானம் இந்தப்பள்ளியாகும். திராவிட இஸ்லாமிய கட்டுமானக் கலைக்கு கண் கூடான எடுத்துக்காட்டாக விளங்கும் இந்தப்பள்ளியை கட்டுவதற்கு சீதக்காதி மரைக்காயர் அவர்கள் பல மாதங்கள் சிந்தித்து திட்டமிட்டு அமைக்க, கால்கோள் இட்டார்கள். முழுவதும் மலைகளில் இருந்து வெட்டப்பட்டு எடுத்து வரப்பட்ட பாறாங் கற்களைக் கொண்டு வரிசை வரிசையான வெளித்துரண்கள், அழகிய ஒன்பது வாயில்கள், விசாலமான தொழுகைக் கூடத்தில் நெடிது உயர்ந்த வேலைப்பாடுகளைக் கொண்ட 86 (முப்பத்து ஆறு) துண்கள். இமாம் தொழுகை நடத்தவும் பயான் செய்யவும் முறையே அழகிய கிப்லாவும் ད།༽