பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ் வள்ளல் சீதக்காதி இன்னொரு ஆவணத்தின்படி தேவரது ! இராமநாதபுரம்) சேதுபதி மன்னரது நம்பிக்கைக்குரிய சிறந்த மனிதர் சீதக்காதி மரைக்காயர் என்பதும் தெரியவருகிறது. மேலும் மற்றொரு ஆவணத்தின்படி இலங்கையில் அப்பொழுது அரசர் விமலதர்ம சூரியாவினால் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஏழு ஆங்கிலேயரை எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்யப்படுவதற்கு பெரியதம்பி மரைக்காயரது செல்வாக்கு பயன்பட்டது என்பதும் தெரிய வருகிறது. கீழை நாடுகளில் கடல் வாணிபத்தில் நமது நாட்டினர் வேறுயாரும் பெற்றிராத வாணிபச்செழுமையையும் அதன் காரணமாக இலங்கை அரசர் போன்றவர்களிடம் பெரியதம்பி மரைக்காயரது எழுத்திற்கும், பேச்சிற்கும் நல்ல செல்வாக்கு இருந்தது என்பதும் புலனாகிறது. இத்தகைய அரிய உதவியைச் செய்து ஆங்கிலேயரின் மானத்தைக் காப்பாற்றிய வணிக வேந்தர் பெரியதம்பி மரைக்காயரது காலத்தால் செய்த நன்றிக்கடப்பாடாக ஆங்கிலேயர் தமிழ நாட்டிலிருந்து இங்கிலாந்து நாட்டின் லண்டன் துறைமுகத்தில் கரை இறங்கும் பெரியதம்பி மரைக்காயரது மிளகுப் பொதிகளுக்கு தீர்வையினின்றும் விலக்கு அளித்து உதவினர் என்பதும் தெரியவருகிறது. என்ன காரணத்தினாலோ ஆங்கிலேயருக்கும் பெரியதம்பி மரைக்காயருக்கும் கி.பி.1690க்குப் பிறகு வணிகத்தொடர்புகள் தொடர்ந்ததைக் குறிக்கும் ஆவண்ங்கள் சென்னையிலுள்ள தமிழ்நாடுஅரசு ஆவணக்காப்பகத்தில் இல்லை. இதனால் அப்பொழுது ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியார் மிளகு வர்த்தகத்தில் மட்டும் ஈடுபட்டிருத்தல் வேண்டும் என்பதும் பெரியதம்பி மரைக்காயரது மிளகு டன் ஏனைய வாசனைப்பொருள்கள் மற்றும் கைத்தறித்துணிகள், முத்து, மணிகள் போன்ற அனைத்து பொருள்களின் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்ததால் மிளகு வியாபாரத்தை ஆங்கிலேயருடன் தொடர்ந்து இலாபகரமான முறையில் நடத்த இயலாது போயிற்று என்பதும் ஊகிக்கப்படுகிறது.