பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

@> செந்தமிழ் வள்ளல் சீதக்காதி (15. பனை முகரி 74. முருங்கன் 75. நரியான் 76. வெள்ளை குருவை 77. கருப்பு குருவை 78. மொட்டை குருவை 79. செங்கணி குருவை ר ஆகியவைகள் அவர்களைக் கவர்ந்தன. இவைகளில் சில வகை நெல்லை கொள்முதல் செய்து யாழ்ப்பாணத்திற்கும். காரைக்காலுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்வதில் ஈடுபட்டிருந்தனர். இது தவிர இந்தப் பகுதியில் உற்பத்தியாகும் கைத்தறி துணிகளிலும், கடல் முத்துக்களிலும் ஏகபோக உரிமை பெறுவதற்கு துடித்துக்கொண்டிருந்தனர். ஆனால் இவர்களுக்கு போட்டியாக பெரியதம்பிமரைக்காயர் இருந்து வருவதும், அவருக்கு இந்த நாட்டு சேதுபதி மன்னரது பேராதரவு இருப்பதும் பெரும தடையாக இருந்தது. இதனால் இராமநாதபுரம் பகுதியிலிருந்து அரிசி கொள்முதல் செய்வதற்காக திம்மராசா என்ற இலங்கை வணிகரை இராமநாதபுரம் சேதுபதி மன்னரது அவைக்கு துரது அனுப்பினர். பலன் ஏதும் ஏற்படாததால் பெரியதம்பி மரைக்காயர் மீது மிகுந்த ஆத்திரம் கொண்டனர். தங்களது கவர்னர் ஜெனரலுக்கு (படேவியாவிலுள்ள) அனுப்பிய கடிதத்தில் அவர்களது கோபமும், ஆத்திரமும் கொப்பளிக்கின்றது. இவ்வளவு மோசமான வகையில் பெரியதம்பி மரைக்காயரது குடும்பத்திைைரப்பற்றி குறிப்பிடுவதிலிருந்து டச்சுக்காரர்களுக்கு பெரியதம்பி மரைக்காயர் மீது எவ்வளவு பகைமை இருந்தது என்பது புலனாகின்றது. கி.பி 7685-ல் பெரியதம்பி மரைக்காயர் சேது மன்னரது ரீஜன்ட் (அரசுப்பிரதிநிதி) என்ற வகையில் திருநெல்வேலிச்சிமை பகுதியில் சேதுபதி மன்னருக்கு வந்து சேர வேண்டிய தீர்வைப் பணத்தை அங்குள்ள பரவர்கள் செலுத்த மறுத்தபொழுது