பக்கம்:செம்மாதுளை .pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 10

போல் அந்த வீட்டைச் சுற்றிக் காவல் புரிந்து கொண்டிருந்தார்கள். உச்சி மாடத்தில் உலாத்திக் கொண்டிருந்த வாளுக்குவேலித்தேவனின் முகத்தோற்றத்தை, எரிந்து கொண்டிருந்த அந்தச் சிறு விளக்கு தெளிவாக்கிக்கொண்டிருந்தது. புருவங்களின் நெளிவும், புஜங்களின் விம்மலும், தேவன் ஏதோ தீராக்கோபத்திலிருக்கிருன் என்பதை உணர்த்திக் கொண்டிருந்தன. தொட்டில் குழந்தைபோல் தூங்கும் பாகனேரியை ஒருமுறை நினைத்துப் பார்த்துவிட்டு சினங்கொண்ட புலி போல் மாடத்திலே உலாத்திக் கொண்டிருக்கும் வாளுக்குவேலியைப் பார்த்தால், தலைவன் வந்து விட்டான், இனிப் பயமில்லையென்று எண்ணித்தான் பாகனேரி இப்படிக் குறட்டைவிட்டுத் தூங்குகிறது என்று தான் எவருக்கும் தோன்றும். உண்மையும் அதுதான். விஜய நகரப் பேரரசின் பிரதிநிதியாக மதுரையை ஆண்ட நாயக்க மன்னரின் அரசாங்கத்தைச் சேர்ந்த மாமல்லன் என்ற மல்யுத்த வீரனை வாளுக்குவேலியின் தம்பி கருத்த ஆதப்பன், வெற்றி கொண்டு விட்டான் என்பதற்காக மதுரை மன்னன் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவுக்குப் போய்விட்டு அன்று காலைதான் வாளுக்குவேலி பாகனேரி திரும்பியிருந்தான். தம்பிக்குக் கிடைத்த கீர்த்தியையும். தரப்பட்ட வெள்ளிக் கேடயங்களையும் எண்ணி எண்ணிப் பூரித்துக் கிடந்த அவன் உள்ளத்தில் அன்று இரவு கவலையும் கோபமும் குடியேறிவிட்டன. முகத்திலே இருந்த களிப்பு, கனலாக மாறியிருந்தது இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும்?' என்ற வீர வரிகளையே போர்க்குரலாக முழக்க மிட்டுப் பழகிய மறவர், தலைவன் மதுரை விட்டுப்பாகனேரி சேர்ந்த சில நாழிகைகளுக்குள்ளேயே சிந்தை நொந்தான் - சினவிழி பெற்றான் என்றால்...?

அகிலத்தைக் கட்டியாளக்கூடிய வல்லமையிருந்தாலும், அவன் இதயத்தையும் குடைந்து கூடாக்கும் கவலையும் அதே அகிலத்தில் எங்கோ ஒரு புதரில் இருக்கத் தான் செய்கிறது. நோக்கைச் சுழற்றிக்கொண்டு நெஞ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/11&oldid=495085" இலிருந்து மீள்விக்கப்பட்டது