பக்கம்:செம்மாதுளை .pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 6

தலைவர்களாக இருந்தமையால் அந்த நாடு கள்ளர் நாடு என வழங்கப்பட்டிருக்கின்றது. கள்ளர்களுக்கு நாட்டார் என்னும் பொதுப் பெயர் இன்றும் வழங்கி வருவது இதற்குச் சான்றாகும்.

ஈதர்ஸ்டன் என்பார் எழுதிய 'தென்னிந்திய சாதி வகுப்பு வரலாறு’ என்னும் நூலில் வரும் மதுரைக் கள்ளர் நாடுகளில், கதையில் முக்கிய அங்கம் வகிக்கும் பாகனேரி நாடும் இடம் பெற்றிருக்கிறது. இந்த நாடு இப்போது சிவகங்கைக் கோட்டத்தின் வடகிழக்குத் திசையில் காலூன்றி நிற்கிறது.

திரு. எஸ். குமாரசாமி மேல்கொண்டார் அவர்கள் எழுதிய ஒரு செப்புப் பட்டயத்தில் வரும் கள்ளர் நாடுகளில் பட்டமங்கல நாடு இடம் பெற்றிருக்கிறது. பாகனேரிக்கு இந்தக் கதையில் எவ்வளவு பங்குண்டோ அந்த அளவு பங்கு பட்டமங்கலத்திற்கும் உண்டு. இந்த நாடு இப்போது திருப்புத்துார் கோட்டத்தின் தென் பகுதியாக விளங்கி வருகிறது. அந்தந்த நாடுகள், இயங்கிவரும் முறையைப் பார்த்தால் தங்களுக்கென வகுக்கப்பட்ட ஒரு சமூகச் சட்டத்திற்கு அவர்கள் தலைவணங்கிச் சேவை புரிகிறார்கள் என்பது தெளிவாகப் புரியும்: கள்ளர் நாடுகளில் ஒவ்வொரு ஊர்களிலும் கள்ளர் குலத்தவரில் ஒருவரோ பலரோ தலைவராக இருப்பார்கள். அவர்களுக்கு அம்பலகாரர் என்று சிறப்புப் பெயர் தரப்படும். நாட்டுக் கூட்டங்களில் அந்த அம்பலகாரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். நாட்டுக் கூட்டத்தின் தீர்ப்பு எவராலும் மீற முடியாத சக்திபெற்றதாக விளங்கிற்று. அத்தகைய கட்டுப்பாடு மிக்க ஒரு வகுப்பாரிடையே நடைபெற்ற பெருங்கலவரத்தின் உண்மையான சரித்திரம் தான் இந்நூல் மிகுந்த கவனம் கொண்டு எழுதப்பட்ட பாடப் புத்தகம் என்றுகூடச் சொல்வேன்.

சரித்திரக் கதை எழுதும் போது எவ்வளவு மகிழ்ச்சி பிறக்கிறதோ அந்த அளவுக்குப் பயமும் பிறக்கிறது. அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செம்மாதுளை_.pdf/7&oldid=495077" இலிருந்து மீள்விக்கப்பட்டது